பாடசாலை மாணவிகள் துஷ்பிரயோகம் ; கணித பாட ஆசிரியர் அதிரடி கைது
எட்டு பாடசாலை மாணவிகளை பல தடவைகள் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் கணித ஆசிரியர் ஒருவர் அரலகங்வில பொலிஸாரால் இன்று (07) கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் பொலன்னறுவை, அரலகங்வில பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. அரலகங்வில பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் சந்தேக நபரான கணித ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் விசாரணைகள்
அரலகங்வில கல்வி வலையத்துக்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில் 10 ஆம் தரத்தில் கல்வி கற்கும் எட்டு மாணவிகளே பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதே பாடசாலையில் கடமையாற்றும் கணித ஆசிரியர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை பொலன்னறுவை நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

No comments:
Post a Comment