மாணவியை கர்ப்பமாக்கிய இளைஞனுக்கு விளக்கமறியல்
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 18 வயது மாணவி ஒருவர் மலசலகூடத்தில் குழந்தையை பெற்று யன்னல் வழியாக வீசிய சம்பவம் தொடர்பாக மாணவியை கர்ப்பமாக்கிய அவரது 24 வயது காதலனும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்
மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் அவரை நேற்று (28)ஆஜர்படுத்தியபோது எதிர்வரும் 7ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை (23) மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 18 வயதுடைய மாணவி ஒருவர் வயிற்று வலி என தெரிவித்து அதிகாலை 3.30 மணிக்கு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு ஆரம்ப சிகிச்சைக்காக குறுந்தரிப்பு அலகு வாட்டில் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் அதிகாலை 5.00 மணிக்கு மலசலகூடத்தில் குழந்தையை பெற்றெடுத்து யன்னல் வழியாக வீசிய நிலையில் குழந்தை யன்னலில் கீழ் உள்ள பிளேற்றில் வீழ்ந்து அழுகுரல் கேட்டதையடுத்து தாதியர்கள் வீசிய குழந்தையை மீட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக குறித்த மாணவியை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது அவரை 7ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டதுடன், குறித்த மாணவியை கர்ப்பமாக்கிய 24 வயதுடைய காதலனை நேற்று (28) கைது செய்து மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது அவரையும் எதிர்வரும் 7ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
மாணவியை கர்ப்பமாக்கிய இளைஞனுக்கு விளக்கமறியல்
Reviewed by Vijithan
on
March 01, 2025
Rating:

No comments:
Post a Comment