அண்மைய செய்திகள்

recent
-

பெரும்பாலான உள்ளூராட்சி சபைகளை கைப்பற்றிய NPP!

 2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வௌியான முடிவுகளுக்கு அமைவாக, 257 உள்ளூராட்சி சபைகளை தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியுள்ளது. 


எவ்வாறாயினும், அக்கட்சிக்கு ஆட்சி அமைப்பதற்கு தேவையான தனிப்பெரும்பான்மை 126 சபைகளில் மாத்திரமே கிடைத்துள்ளது. ஏனைய சபைகளில் ஆட்சியமைப்பதற்கு மற்றைய கட்சிகளின் உதவியைப் பெற வேண்டிய கட்டாயத்தில் தேசிய மக்கள் சக்தி காணப்படுகிறது. 

அத்தோடு, ஐக்கிய மக்கள் சக்தி, இலங்கை தமிழரசுக் கட்சி, ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் சுயாதீன கட்சிகளிடமும் ஏனைய சபைகளுக்கான ஆட்சி அதிகாரம் பிரிந்துச் சென்றுள்ளது. 

கொழும்பு மாநகர சபை உள்ளிட்ட பல உள்ளூராட்சி சபைகளில் தேசிய மக்கள் சக்தி பெற்றுக்கொண்ட உறுப்பினர்களை விடவும் அதிகளவான உறுப்பினர்களை எதிர்க்கட்சிகள் பெற்றுக்கொண்டுள்ளமை விசேட அம்சமாகும்.

 

இதற்கமைய வௌியான உத்தியோகபூர்வ முடிவுகளின் அடிப்படையில், 

தேசிய மக்கள் சக்தி (NPP) - 43.3 வீதமான வாக்குகள் - 3,841 உறுப்பினர்கள் 

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) - 21.6 சதவீத வாக்குகள் - 1,727 உறுப்பினர்கள் 

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) - 9.1 சதவீத வாக்குகள் - 726 உறுப்பினர்கள் 

ஐக்கிய தேசிய கட்சி (UNP) - 4.6 சதவீத வாக்குகள் - 371 உறுப்பினர்கள் 

பொதுஜன ஐக்கிய முன்னணி (PA) - 3.6 சதவீத வாக்குகள் - 292 உறுப்பினர்கள் 

இலங்கை தமிழரசு கட்சி (ITAK) - 2.8 சதவீத வாக்குகள் - 364 உறுப்பினர்கள் 

சர்வஜன அதிகாரம் (SB) - 2.8 சதவீத வாக்குகள் - 264 உறுப்பினர்கள் 

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) - 1.3 சதவீத வாக்குகள் - 114 உறுப்பினர்கள் 

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி (DTNA) - 0.8 சதவீத வாக்குகள் - 105 உறுப்பினர்கள் 

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் (ACMC) - 0.7 சதவீத வாக்குகள் - 60 உறுப்பினர்கள் 

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (CWC) - 0.6 சதவீத வாக்குகள் - 54 உறுப்பினர்கள்




பெரும்பாலான உள்ளூராட்சி சபைகளை கைப்பற்றிய NPP! Reviewed by Vijithan on May 07, 2025 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.