இலங்கையில் இறுதி யுத்தத்தின் போது உயிர் நீத்த ஈழத் தமிழர்களை நினைவுகூரும் வகையில் பிரித்தானியாவில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்
இலங்கையில் 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதி யுத்தத்தின் போது உயிர் நீத்த ஈழத் தமிழர்களை நினைவுகூரும் வகையில் பிரித்தானியாவில் உள்ள ஒக்ஸ்போட் உலகத் தமிழர் வரலாற்று மையத்தில் இன்றைய தினம் (18) முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம் பெற்றுள்ளது.
தமிழினப் படுகொலையின் (மே-18) 16 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்றைய தினம் இலங்கையின் வடக்கு கிழக்கு தமிழர் பிரதேசங்களில் நினைவு கூறப்பட்டு வரும் நிலையில் பிரித்தானியாவில் உள்ள ஒக்ஸ்போட் உலகத் தமிழர் வரலாற்று மையத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம் பெற்றுள்ளது.
இதன் போது புலம் பெயர்ந்து பிரித்தானியாவில் வாழ்ந்து வரும் ஈழத் தமிழர்களும் குறித்த நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டு ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுத்துள்ளனர்.

No comments:
Post a Comment