தேத்தாவடி பிரதேசத்திற்கு திடீர் விஜயம் மேற்கொண்ட மன்னார் அரசாங்க அதிபர்- சட்டவிரோத மண் அகழ்வு செய்பவர்களின் உரிமம் இரத்து
தேத்தாவாடி பிரதேசத்திற்கு திடீர் விஜயம் மேற்கொண்ட மன்னார் அரசாங்க அதிபர்- சட்டவிரோத மண் அகழ்வு செய்பவர்களின் உரிமம் இரத்து
மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட தேத்தாவாடி பகுதிக்கு மன்னார் அரசாங்க அதிபர் க. கனகேஸ்வரன் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் அரவிந்தன் அனர்த்த முகாமைத்துவ பிரிவின் அதிகாரி திலீபன் அவர்களும் OPEnE நிறுவனத்தினரும் திடீர் விஜயம் மேற்கொண்டிருந்தனர்
குறித்த விஜயத்தின் போது தேத்தாவடி பிரதேசத்தில் நடக்கும் சட்ட விரோதமான மணல் அகழ்வு தொடர்பில் உடனடி நடவடிக்கையாக சட்டவிரோதமான மண் அகழ்வில் ஈடுபடுபவர்களுக்கான உரிமம் ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது அதனைத் தொடர்ந்து தேத்தாவாடி ஆற்றுப்பகுதிக்கு விஜயம் செய்த குறித்த குழுவினர் ஆற்றுப்பகுதியில் உள்ள நீரை குளத்திற்கு செலுத்துவது மற்றும் அதனூடாக விவசாய நடவடிக்கைகளுக்கு அதனை பயன்படுத்தப்படுவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன் சிதைவுற்ற குளத்தை மீள்புணரமைப்பு செய்யவும் அரசாங்க அதிபர் பரிந்துரை செய்திருந்தார்.
குறித்த குழுவினர் எளிமையான முறையில் உழவு இயந்திரத்தில் தேத்தாவாடி குளம், மன் அகழ்வு செய்யும் இடங்கள் மற்றும் ஆற்றங்கரைக்கு சென்றிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும் ..
இவ்வாறான விஜயத்தினை மேற்கொள்ள தேத்தாவாடி மக்களுக்கு OPEnE நிறுவனம் பக்கபலமாக இருந்தமை அம் மக்களினூடாக தெரிய வருகின்றது

No comments:
Post a Comment