தாயக கலைவிழா-2025
தாயக கலைவிழா-2025
*****************************************************************************
சுவிற்சர்லாந்து செங்காளன் மாநிலம் “இறெயின்தாளர் தமிழ் மன்றம்” தனது 33ஆவது ஆண்டு சிறப்பு நிகழ்வாக தாயகத்தின் மன்னார் துள்ளுகுடியிருப்பு
றோமன் கத்தோலிக்க தமிழ்க் கலவன் பாடசாலையில்
“தாயக கலைவிழா 2025” எனும் தொனிப்பொருளில் கடந்த 26.04.2025 அன்று “ஏர் நிலம்” தொண்டமைப்பின் விசேட ஏற்பாட்டில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழா பாடசாலை முதல்வர் திரு.அந்தோணி தாசன் குரூஸ் அவர்கள் தலைமையில் பாரம்பரிய பண்பாட்டு நிகழ்வுகளோடு ஆரம்பமானது.
இன் நிகழ்விற்கு முதன்மை விருந்தினராக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் அவர்களும், சிறப்பு விருந்தினராக
சிவஸ்ரீ தர்மகுமார குருக்கள் அவர்களும், மன்னார் வலயக்கல்வி பணிமனை ஆசிரிய ஆலோசகர் திரு.ஜீ.ஏ ரமேஸ் அவர்களும், மதிப்புறும் அதிதிகளாக ஏர் நிலம் தொண்டமைப்பின் ஆலோசகரும் மேனாள் அதிபருமான கலாநிதி சூரியகுமாரி இராசேந்திரம் அவர்களும், ஏர் நிலத்தின் தாயக இணைப்பாளர் கவிஞர் பிரான்சிஸ் பெனில் அவர்களும் இன் நிகழ்வில் கலந்நு சிறப்பித்திருந்தனர்.
நிகழ்விற்க்கு அழைக்கப்பட்ட விருந்தினர்கள் மலர்மாலை அணிவிக்கப்பட்டு மலர் தூவி கோலாட்ட வரவேற்போடு
நிகழ்வு மண்டபம் நோக்கி அழைத்து வரப்பட்டனர்.
மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வு ஆரம்பமாகி தொடர்ந்து அகவணக்கம், இசை வடிவிலான குறளிசை அதனைத் தொடர்ந்து வரவேற்பு நடனத்தினை மாணவிகளான றொபின்சன் அனுசியா, ஜேபநேசன் திஷானா, யகாகோவு யக்ஷானி, தேவராஜ் அன்சலினா, அமவதாசன் நயனிக்கா ஆகியோர் சிறப்பான ஆடலுடன் விருந்தினர்களை வரவேற்றனர்.
தொடர்ந்து வரவேற்பு உரையினை ஆசிரியை திருமதி.தயாநிதி தமயந்தி அவர்கள் நிகழ்த்தினார்.
ஆசியுரை சிவஸ்ரீ தர்மகுமார குருக்களும், தலைமை உரையினை பாடசாலை முதல்வரும் நிகழ்த்தினர். அவர் தனது உரையில்…
ஏர் நிலம் தொண்ட அமைப்பு ஊடாக சுவிற்சர்லாந்து செங்காளன் இறெயின்தாளர் தமிழ் மன்றத்தினர் தமது பாடசாலைக்கு பல்வேறு பட்ட செயற்திட்டங்களை முன்னெடுத்ததாகவும் தொடர்ந்து தமக்கு ஆதரவு வழங்கி தம்முடைய பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கியதாகவும் அதனை தொடர்ந்து தற்காலிக வகுப்பறை கூடத்தின் குறைகளை நிவர்த்தி செய்து முழுமையாக்கி தந்ததாகவும் அவர்களுக்கு தமது பாடசாலை சமூகம் நன்றிகளை என்றும் கூறுவதாகவும் கூறினார்
தொடர்ந்து மாணவி கே.யதுமிகா அவர்களால் தமிழ்மொழி சிறப்பு கவிதை வாசிக்கப்பட்டது .
தொடர்ந்து தில்லானா நடன நிகழ்வை மாணவிகளான செல்வி.சிறிதரன் றதுசங்கா, செல்வி.சேவியர் ராஜன் ஸ்ரபினா கூஞ்ஞன், செல்வி.கிறிஸ்டி ஆன் கிஷானா பெனாண்டோ ஆகியோர் நிகழ்த்தினர்.
சிறப்புரையினை நிகழ்த்திய கலாநிதி சூரியகுமாரி இராசேந்திரம் அவர்கள் இறெயின்தாளர் தமிழ் மன்னத்தினரின் செயற்பாடுகள் பற்றி கூறியதோடு இளம் பிள்ளைகளால் தற்போது நிர்வகிங்கப்படும் இறெயின்தாளர் தமிழ் மன்றம் ஏர் நிலம் தொண்டமைப்பின் ஊடாக செயற்படுத்தும் செயற்பாடுகள் தொடர்பாகவும் கடந்த காலத்தில் இறெயின்தாளர் தமிழ் மன்றத்தினை தமது பெற்றோர்கள் எவ்வாறு சிறப்பாக செயற்படுத்தினார்களோ அதேபோன்று இளம் தலைமுறையினர் தற்போது நிர்வகித்து வருகிறார்கள். அவர்கள் தாயக மாணவ மாணவிகளின் கற்றல் செயற்பாட்டுகளையும் கலைத் திறமைகளையும் வளர்க்கும் முகமாக தாம் சிறுக சிறுக சேகரிக்கும் நிதியில் இவ்வாறான பெரு நிகழ்வுகள் தாயகத்தில் செயற்படுத்தபடுவதாக நன்றியுணர்வுடன் பாராட்டினார். மாணவர்கள் சிறப்பாக தம் கற்றல் செயற்பாடுகளை மேற்கொண்டு எதிர்காலத்தி இப்பாடசாலை தரம் உயர்த்தப்பட வேண்டும் என வேண்டுகை விடுத்தார்.
தொடர்ந்து இறெயின்தாளர் தமிழ்மன்றத்தின் ஆலோசகர் திரு.சீ.சரவணபவானந்தன்,
ஏர் நிலம் தொண்டமைப்பின் நிறுவுநர் திரு.து.திலக் (கிரி), இறெயின்தாளர் தமிழ்மன்னத்தின் உபதலைவர் செல்வன்.லி.சாரங்கன் ஆகியோரின் குரல் வடிவிலான வாழ்த்துச் செய்தி பகிரப்பட்டது.
தொடர்ந்து சிறப்பு விருந்தினராக வருகைதந்த மன்னார் வலைய கல்வி பணிமனை ஆசிரிய ஆலோசகர் ஜி.ஏ.ரமேஷ் அவர்கள் உரையாற்றினார்.
அதனைத் தொடர்ந்து கலை நிகழ்வுகளாக பேச்சு,கிராமிய நடனம் ஆகியவை அரங்கேறி அனைவரையும் ஈர்த்தது.
தொடர்ந்து மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து பிரதம விருந்தினராக கலந்து கொண்ட மன்னார் மாவட்ட செயலாளர் உயர்திரு. க.கனகேஸ்வரன் அவர்கள் நல்ல பல கருத்துக்களை தனது சிறப்புரையில் ஆற்றினார்.
தொடர்ந்து ஏர் நிலம் தொண்டமைப்பின் இணைப்பாளர் பெனில் அவர்கள் ஏர் நிலம் தொண்டமைப்பின் ஊடாக இறெயின்தாளர் தமிழ் மன்றம் ஆற்றும் பணிகளை சிறப்பாக எடுத்துக்கூறி நன்றி பகிர்ந்தார்.
அதனைத் தொடர்ந்து மாணவர்களால் வார்த்தைகள் அற்ற செய்கை மூலமான நாடகம் அனைவரின் பாராட்டையும் பெற்றது. இந் நிகழ்வின் நன்றியுரையினை ஆசிரியர் பிரிமலா அவர்கள் நிகழ்த்தினார். மாணவர்களுக்கு குளிர்பானங்களும்,சிற்றுண்டிகளும், சிறப்புணவும் வழங்கப்பட்டதோடு நிகழ்வு இனிதே நிறைவு பெற்றது…
தற்காலிக வகுப்பறை புனரமைப்பு,கலை நிகழ்வு என்பவற்றுக்கான நிதியாக
630,000/=(ஆறு இலட்சத்து முப்பதாயிரம் ரூபா) இறெயின்தாளர் தமிழ் மன்றம் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
செய்தியாக்கம்:-
து.திலக்(கிரி),
சுவிற்சர்லாந்து.

No comments:
Post a Comment