மன்னார் துள்ளு குடியிருப்பு பகுதியில் நடைபெற்ற இலவச கண் பரிசோதனை மற்றும் மூக்கு கண்ணாடி வழங்கல்-நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டு பயணடைவு.
மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள துள்ளு குடியிருப்பு பகுதியில் இலவசமாக கண் பரிசோதனை செய்யப்பட்டு அவர்களுக்கு இலவச மூக்கு கண்ணாடிகள் வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் சனிக்கிழமை (10) காலை இடம்பெற்றது.
'ஈகில் ஐ இன்டர்நேஷனல் நெட் வர்க் பிரைவேட் லிமிடெட்' நிறுவனத்தின் அனுசரனையுடன் மன்னார் துள்ளு குடியிருப்பு கிராம பகுதியில் 39 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவசமாக கண் பரிசோதனை செய்யப்பட்டு அவர்களுக்கு இலவசமாக மூக்கு கண்ணாடிகளும் வழங்கப்பட்டது.
கொழும்பிலிருந்து வருகை தந்த வைத்தியர்கள் இப்பரிசோதனையை முன்னெடுத்தனர்.
இதன் போது துள்ளு குடியிருப்பு, கட்டுக்காரன் குடியிருப்பு ஆகிய கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றுள்ளனர்.
துள்ளு குடியிருப்பு ஆலய வளாகத்தில் இன்று சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெற்ற குறித்த கண் பரிசோதனை மற்றும் இலவச மூக்கு கண்ணாடிகள் வழங்கும் நிகழ்வில் குறித்த பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டு பயனடைந்துள்ளனர்.

No comments:
Post a Comment