குழந்தைகளிடையே வேகமாக பரவும் நோய்கள்!
குழந்தைகளிடையே இன்ஃப்ளூயன்ஸா, சிக்குன்கன்யா மற்றும் டெங்கு போன்ற நோய்கள் அதிகரித்து வருவதாகக் லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
அண்மைய சீரற்ற வானிலை காரணமாக டெங்கு மற்றும் சிக்குன்கன்யா நோய்கள் அதிகரித்து வருவதாக வைத்திய நிபுணர் சுட்டிக்காட்டுகிறார்.
அதன்படி, நுளம்புகள் பெருகும் இடங்களை அழிப்பதில் அனைவரும் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
டெங்கு மற்றும் சிக்குன்கன்யா அறிகுறிகளைக் கொண்ட குழந்தைகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதாகவும், டெங்கு ஆபத்தானது என்றும், சிக்குன்கனியா ஏற்பட்ட பிறகு மக்கள் பல மாதங்களுக்கு மூட்டு வலியால் அவதிப்படுவார்கள் என்றும் வைத்திய நிபுணர் கூறினார்.
அத்துடன் கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் முதியவர்கள் சிக்குன்கன்யாவால் பாதிக்கப்பட்டால், அது தீவிரமாக இருக்கலாம் என்றும், இந்த நிலை கர்ப்பிணித் தாய்மார்களுக்குப் பிறக்கும் குழந்தையையும் பாதிக்கலாம் என்றும் வைத்திய நிபுணர் சுட்டிக்காட்டினார்.
இன்றைய காலகட்டத்தில் இன்ஃப்ளூயன்ஸா நோய் நிலை அதிகரித்து வருவதாலும், இந்த நோய் குழந்தைகளிடையே வேகமாகப் பரவக்கூடும் என்பதாலும் பொதுமக்கள் கவனம் செலுத்த வேண்டும் என்றும் வைத்திய நிபுணர் டாக்டர் தீபால் பெரேரா அறிவுறுத்தியுள்ளார்.
குழந்தைகளிடையே வேகமாக பரவும் நோய்கள்!
Reviewed by Vijithan
on
June 01, 2025
Rating:
Reviewed by Vijithan
on
June 01, 2025
Rating:


No comments:
Post a Comment