அண்மைய செய்திகள்

recent
-

பொலிஸாரிடம் இருந்து தப்பிக்க முயன்றவர் கிணற்றில் வீழ்ந்து பலி

 கிளிநொச்சி இராமநாதபுரம் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் நேற்று (24) இரவு பொலிஸாரிடமிருந்து தப்பிக்க முயன்ற ஒருவர் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தார். 


சட்டவிரோத மதுபான உற்பத்தி தொடர்பில் பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய இராமநாதபுரம் பொலிஸார் அப்பகுதியில் சோதனை செய்ய முற்பட்ட போது, ஆலடி பகுதியில் சந்தேகநபர் தப்பிச் செல்ல முற்பட்டுள்ளார். 

இதன்போதே அவர் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

அதே பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்தார். 

உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. 

சம்பவம் தொடர்பாக இராமநாதபுரம் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




பொலிஸாரிடம் இருந்து தப்பிக்க முயன்றவர் கிணற்றில் வீழ்ந்து பலி Reviewed by Vijithan on September 25, 2025 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.