அகில இலங்கை பாடசாலை மாணவர்களுக்கு இடையிலான தேசிய மட்ட பளுதூக்கல் போட்டியில் மன்னார் சித்திவிநாயகர் இந்து கல்லூரியின் மாணவி சம்சிக்கா சத்தியசீலன் தங்கப் பதக்கம்.
அகில இலங்கை பாடசாலை மாணவர்களுக்கு இடையிலான தேசிய மட்ட 15 வயது பிரிவுக்குட்பட்ட பெண்களுக்கான பளுதூக்குதல் போட்டியில் வடமாகாணம் சார்பாக மன்னார் சித்திவிநாயகர் இந்து கல்லூரியின் மாணவி செல்வி சம்சிக்கா சத்தியசீலன் கலந்து கொண்டு தங்கப்பதக்கம் பெற்றுக்கொண்டார்.
மன்னார் தாழ்வுபாடு கிராமத்தைச் சேர்ந்த குறித்த மாணவி தேசிய மட்டத்திலான பளு தூக்கும் போட்டியில் கலந்து கொண்டு வெற்றியீட்டிய முதல் பெண் மணியாகவும் இவர் விளங்குகிறார்.
இவரது பயிற்றுவிப்பாளராக மாவட்ட மெய்வல்லுனர் பயிற்றுனர் ஜூலியட் சிலிடாஸ் (Juliet cilitas) செயல்பட்டுள்ளார்.
குறித்த மாணவி மன்னார் மாவட்டத்திற்கும்,பாடசாலைக்கும் பெருமையை சேர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Reviewed by Vijithan
on
September 17, 2025
Rating:




No comments:
Post a Comment