மன்னார் மாவட்டத்தில் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு எஞ்சியுள்ள கால் நடைகளை பாதுகாக்கும் வகையில் இடம் பெற்ற விசேட நடமாடும் கால்நடை வைத்திய நடவடிக்கை.
மன்னார் மாவட்டத்தில் ஏற்பட்ட புயல் மற்றும் வெள்ளம் காரணமாக மாவட்டத்தில் கால்நடை வளர்ப்பில் ஈடுபடும் பண்ணையாளர்கள் பாரிய இழப்பை சந்தித்துள்ள நிலையில் பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கான இலவச சிகிச்சை அளிக்கும் நடமாடும் சேவை இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (12) மாவட்ட ரீதியில் மன்னார் கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்கள பிரதிப் பணிப்பாளர் கனியூட் பேபிதுரை வின்சன்ட் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது.
மன்னார் மாவட்டத்தில் ஏற்பட்ட புயல் மற்றும் வெள்ளம் காரணமாக மாவட்டத்தில் உள்ள ஐந்து பிரதேசச் செயலாளர் பிரிவுகளிலும் கால்நடை வளர்ப்பில் ஈடுபடும் பண்ணையாளர்கள் பாரிய இழப்பை சந்தித்த ள்ளனர்.
மாவட்டத்தில் மன்னார்,நானாட்டான்,முசலி,மாந்தை மேற்கு,மடு ஆகிய ஐந்து பிரதேச செயலாளர் பிரிவுகளில் ஆயிரக்கணக்கான கால்நடைகள் உயிரிழந்துள்ளது.
குறிப்பாக ஆடு,மாடு,கோழி பன்றி ,எருமை மாடு போன்ற இழப்புக்களை பண்ணையாளர்கள் சந்தித்துள்ளனர்.
குறித்த பண்ணையாளர்களின் எஞ்சிய உயிரினங்களை பாதுகாக்கும் வகையிலும்,பண்ணையாளர்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையிலும் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (12) மாவட்டம் முழுவதும் கால்நடை வைத்தியர்கள் ஆறு பேர் உள்ளடங்களாக மிருக வைத்திய குழு ஒன்றை அமைத்து 6 குழுக்களாக வெவ்வேறு இடங்களில் இலவசமாக கால்நடை வைத்திய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
-மத்திய அமைச்சு,கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களம்,இலங்கை கால்நடை அரச வைத்தியர் சங்கம்,இலங்கை கால்நடை வைத்தியர் சங்கம் ஆகியோர் அனுசரணை வழங்கி உள்ளனர்.
பாதிக்கப்பட்ட பண்ணையாளர்கள் தொடர்ந்து தமது தொழிலை முன்னோக்கி செல்வதற்கு கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களம் தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
Reviewed by Vijithan
on
December 12, 2025
Rating:


No comments:
Post a Comment