அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் - பாலைப்பெருமாள்கட்டு கிராம அலுவலர் பிரிவில் உழவர் பொங்கல் விழா – சாதனையாளர்கள், மூத்த விவசாயிகள் கௌரவிப்பு

  2026.01.27 அன்று பாலைப்பெருமாள்கட்டு கிராம அலுவலர் பிரிவில் உழவர் பொங்கல் விழா மற்றும் பல்வேறு கௌரவிப்பு நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன.


கிராம அலுவலர் திரு. S. லுமாசிறி அவர்களின் தலைமையில், அபிவிருத்தி அலுவலர், சமுர்த்தி அபிவிருத்தி அலுவலர், பாலைப்பெருமாள்கட்டு கிராம அலுவலர் பிரிவு மக்கள் மற்றும் மனோன்மணி அறக்கட்டளை இணைந்து இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர்.


இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ M. ஜெகதீஸ்வரன் அவர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார். மேலும் சமயத் தலைவர்கள், மனோன்மணி அறக்கட்டளையின் நிர்வாகத்தினர், பாடசாலை அதிபர்கள், அரச அதிகாரிகள், கிராம மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் கிராம மக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.


இந்நிகழ்வின் போது 2025ஆம் ஆண்டு நடைபெற்ற தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்கள், பல்கலைக்கழகங்களில் கல்வி கற்கும் மாணவர்கள், HNDA பயிலும் மாணவர்கள், கல்வியியற் கல்லூரிகளில் கல்வி தொடர்பவர்கள், முன்மாதிரியான கலைஞர்கள் மற்றும் கிராமத்தின் சிரேஷ்ட விவசாயிகள் கௌரவிக்கப்பட்டனர்.


அதனுடன் பல சிறப்பான கலை நிகழ்வுகளும் இடம்பெற்று விழா மிகுந்த உற்சாகத்துடனும் மகிழ்ச்சியுடனும் நிறைவடைந்தது.






















மன்னார் - பாலைப்பெருமாள்கட்டு கிராம அலுவலர் பிரிவில் உழவர் பொங்கல் விழா – சாதனையாளர்கள், மூத்த விவசாயிகள் கௌரவிப்பு Reviewed by Vijithan on January 28, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.