அண்மைய செய்திகள்

recent
-

இலுப்பைக் கடவையில் மாந்தை மேற்கு பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் அரைக்கும் ஆலை புனரமைக்கப்பட்டு திறந்து வைப்பு

 இலுப்பைக் கடவையில் மாந்தை மேற்கு பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் அரைக்கும் ஆலை புனரமைக்கப்பட்டு நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை (3) வைபவ ரீதியாக  திறந்து வைக்கப்பட்டுள்ளது.


  மாந்தை மேற்கு பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் தலைவர் வி.எஸ் சிவகரன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில்  பிரதம விருந்தினராக மாவட்ட அரசாங்க அதிபர் கே. கனகேஸ்வரன், சிறப்பு விருந்தினராக மாகாண கூட்டுறவு ஆணையாளர் செல்வி அகல்யா ஆகியோர் கலந்து கொண்டதோடு, மன்னார் மாவட்ட கூட்டுறவு உதவி ஆணையாளர், உதவி மாவட்ட செயலாளர் உட்பட பல அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர் .


குறித்த அரைக்கும் ஆலை யில்  அனைத்து விதமான தேவைகளையும் பூர்த்தி செய்வதற்குரிய வசதிகளுடன்  கூடிய வகையில் புனரமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது.














இலுப்பைக் கடவையில் மாந்தை மேற்கு பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் அரைக்கும் ஆலை புனரமைக்கப்பட்டு திறந்து வைப்பு Reviewed by Vijithan on March 04, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.