அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் 'ஜீவ ஊற்று அன்பின் கரம்' அலுவலகம் திறந்து வைப்பு- பெண்களின் சுயதொழில் நடவடிக்கையை ஊக்கு விக்க தையல் பயிற்சியும் ஆரம்பித்து வைப்பு.

 ஜீவ ஊற்று அன்பின்  கரம் அலுவலகம் இன்றைய தினம் வியாழக்கிழமை (26) மன்னார் பனங்கட்டுக்கொட்டு பகுதியில் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளதோடு,பெண்களுக்கான தையல் பயிற்சியும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.


'ஜீவ ஊற்று அன்பின்  கரம்' அமைபின் ஸ்தாபகர் பெல்ஜியத்தில் வசித்து வரும் ஜெஜீவனின் வழி காட்டுதலில் இலங்கையின் பல இடங்களில் தமது மனிதாபிமான நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.


இந்த நிலையில் ஜீவ ஊற்று அன்பின்  கரம் அலுவலகம் இன்றைய தினம் வியாழக்கிழமை(26) மன்னார் பனங்கட்டுக்கொட்டு பகுதியில் திறந்து வைக்கப்பட்டது.


இதன் போது மன்னார் உதவி மாவட்டச் செயலாளர் டில்சான் பயஸ்,ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பின் இலங்கைக்கான பணிப்பாளர் ஜோன் தயாழினி குறித்த அமைப்பின் செயலாளர் பெஞ்சமின் ஆகியோர் இணைந்து வைபவ ரீதியாக திறந்து வைத்தனர்.


அதனைத்தொடர்ந்து தெரிவு செய்யப்பட்ட 25 பெண்களுக்கு மூன்று மாத கால தையல் பயிற்சிகளை வழங்குவதற்காக ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.குறித்த நிகழ்வில் ஜீவ ஊற்று அன்பின்  கரம் அமைப்பின் மன்னார்,கிளிநொச்சி மாவட்ட பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.













மன்னாரில் 'ஜீவ ஊற்று அன்பின் கரம்' அலுவலகம் திறந்து வைப்பு- பெண்களின் சுயதொழில் நடவடிக்கையை ஊக்கு விக்க தையல் பயிற்சியும் ஆரம்பித்து வைப்பு. Reviewed by Vijithan on March 26, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.