அண்மைய செய்திகள்

recent
-

பகல்நேர பராமரிப்பு நிலையத்தில் பலியான 18 மாதக் குழந்தை!

 பகல்நேர பராமரிப்பு நிலையம் ஒன்றில் இருந்த 18 மாதக் குழந்தை ஒன்று, அங்கிருந்த குளத்தில் விழுந்து உயிரிழந்துள்ள சோகமான சம்பவம் பதிவாகியுள்ளது.


மெதமுலன, கதமடித்த பிரதேசத்தைச் சேர்ந்த 18 மாதக் குழந்தையான எயோன் தீசர அவிநாத் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.


குழந்தையின் தாய், வழமை போல குழந்தையைப் பராமரிப்பு நிலையத்தில் ஒப்படைத்துவிட்டு தனது வேலைக்குச் சென்றுள்ளார்.


பின்னர், குறித்த பராமரிப்பு நிலையத்தின் காப்பாளர் தாயைத் தொடர்புகொண்டு மித்தெனிய காரியமடித்த வைத்தியசாலைக்கு வருமாறு கோரியுள்ளார். அங்கு சென்ற பின்னரே தனது மகன் குளத்தில் விழுந்து உயிரிழந்த செய்தியை அந்தத் தாய் அறிந்துள்ளார்.


குழந்தையின் பாதுகாப்பு விடயத்தில் கவனக்குறைவாகச் செயற்பட்ட குற்றச்சாட்டின் கீழ், குறித்த பராமரிப்பு நிலையத்தின் காப்பாளர் எம்பிலிப்பிட்டிய தலைமையகப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.






பகல்நேர பராமரிப்பு நிலையத்தில் பலியான 18 மாதக் குழந்தை! Reviewed by Vijithan on March 11, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.