அண்மைய செய்திகள்

recent
-

மதில் சுவர் இடிந்து வீழ்ந்ததில் 7 வயது சிறுவன் பலி

 மதில் சுவர் இடிந்து விழுந்ததில் 7 வயது சிறுவன் ஒருவன் பலியான சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

 

பலாங்கொடை, பங்கியாவத்த பகுதியில் இந்த சோகச் சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.

 

வீட்டின் முன்பாகத் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த மதில் சுவருக்கு அருகில் இன்று பிற்பகல் 1.15 மணியளவில் குறித்த சிறுவன் நின்றுகொண்டிருந்த போது, அம்மதில் சுவர் இடிந்து வீழ்ந்துள்ளது.

 

அதற்குள் அச்சிறுவன் சிக்குண்டு இருப்பதை சிறுவனின் தாயார் அவதானித்து, அயலவர்களின் உதவியுடன் சிறுவன்  மீட்கப்பட்டுள்ளார்.

 

மீட்கப்பட்ட சிறுவன் உடனடியாக முச்சக்கரவண்டியொன்றின் மூலம் பலாங்கொடை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

 

சடலம் பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சடலம் மீதான பிரேத பரிசோதனை நாளை நடைபெறவுள்ளது.

 

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பலாங்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





மதில் சுவர் இடிந்து வீழ்ந்ததில் 7 வயது சிறுவன் பலி Reviewed by Vijithan on November 21, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.