அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மாவட்டத்தில் உள்ள உணவகங்களில் மக்களின் நலனையும்,சுகாதாரத்தையும் கருத்தில் கொண்டு உணவு தாயரிப்பை முன்னெடுக்க வேண்டும்

 மன்னார் மாவட்டத்தில் உள்ள உணவகங்களில்  சில உணவகங்கள் தொடர்ந்து,மக்களின் நலனை பாதிக்கும் வகையில் உணவு தயாரிக்கும் நிலை கண்டறியப்பட்டு வரும் நிலையில் உங்களை நம்பி வருகின்ற மக்களுக்கு ஆரோக்கியமான சுகாதாரமான உணவுகளை வழங்க உணவக உரிமையாளர்கள் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மன்னார் நகர முதல்வர் டானியல் வசந்தன் தெரிவித்தார்.


மன்னார் மாவட்டத்தில் உணவுப் பாதுகாப்பு மற்றும் உணவு சுகாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், விசேட விழிப்புணர்வு நிகழ்வு  இன்று (17)  செவ்வாய்க்கிழமை காலை முதல் மதியம் வரை மன்னார் நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றது.


   மன்னார்  நகர சபையின் முதல்வர், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், சுகாதார வைத்திய அதிகாரிகள் மற்றும் பொது சுகாதாரப் பரிசோதகர்கள் ஒருங்கிணைப்பில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.


 குறித்த விழிப்புணர்வு நிகழ்வில் மன்னார்,நானாட்டான்,முசலி,மாந்தை மேற்கு மற்றும் மடு ஆகிய ஐந்து சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுகளில் உள்ள உணவகங்கள், வெதுப்பகங்கள் உள்ளிட்ட உணவுத்துறை வர்த்தகர்கள்  என சுமார் 400 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.


இதன்போது கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.


அவர் மேலும் உரையாற்றுகையில்,,,


உணவுத்துறை சார்ந்த விவகாரங்களில் நாம் மிகுந்த அக்கறையுடன் செயல்பட வேண்டிய தேவை உள்ளது. மக்கள்  உங்கள்

உணவகங்களுக்கு வந்து உணவருந்தும் போது, உங்கள் மீது நம்பிக்கை வைத்து சுத்தமாகவும், சுகாதாரமாகவும் தயாரிக்கப்பட்ட உணவை உட்கொள்கிறார்கள்.


ஆனால், கடந்த காலங்களில் பல உணவகங்கள் மிகவும் சுகாதாரமற்ற முறையில் உணவுகளை தயாரித்து வழங்குவது காணப்படுகிறது. மக்கள் உங்களை நம்பி உணவருந்த வந்தாலும், சில இடங்களில் இந்த உணவுகளை சுத்தமாக சுகாதாரமாக தயாரிக்கப்படுவதில்லை.


   பல உணவகங்கள் ஒரே எண்ணெயை மீண்டும் மீண்டும், பல முறை சூடாக்கி பயன்படுத்துகின்றன. இதனால் அந்த எண்ணெய் கறுப்பு நிறமாக மாறிவிடுகிறது.


   உண்மையில், அந்த உணவை உண்பவர்களுக்கு புற்றுநோய் (Cancer) வருவதற்கான ஆபத்து இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். சூடாக்கிய எண்ணெயை மீண்டும் மீண்டும் சூடாக்கும் போது அது புற்றுநோயை ஏற்படுத்தும் அபாயத்தை உருவாக்குகிறது.


  உணவுகளைத் தயாரிக்கும் போது செயற்கைப் பொருட்கள் அல்லது அஜினோமோட்டோ போன்ற உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் பொருட்களை தவிர்க்க வேண்டும் என பலமுறை அறிவுறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், இத்தகைய செயற்கைப் பொருட்களைச் சேர்த்து உணவைத் தயாரித்து மக்களுக்கு சுகாதாரமற்ற முறையில் வழங்குவது குற்றத்திற்கு சமமான செயலாகும்.


அந்த விவகாரத்தில் மாகாண சபை மிகவும் இறுக்கமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. எதிர்காலத்தில் இது மேலும் கடுமையாக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.


   மாகாண சபை சார்பில் அதிகாரிகள் இந்த நிகழ்வைச் சிறப்பாக ஏற்பாடு செய்துள்ளனர். மாகாண சுகாதார பிரிவு    அதிகாரிகளும் இந்த நிகழ்வை சிறப்பாக நடத்தி வருகிறார்கள்.


உணவக உரிமையாளர்கள் தங்களது உணவகங்களை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். தயாரிக்கும் உணவுகளை சுகாதாரமான முறையில் தயாரித்து,  உங்களை நம்பி வருபவர்களுக்கு முழு நம்பிக்கையோடு நல்ல உணவை வழங்க வேண்டும் என்று   தெரிவித்தார்.


குறித்த நிகழ்வில் பொது சுகாதார பரிசோதகர்கள்,வைத்தியர்கள் என பலர் கலந்துகொண்டு விழிப்புணர்வு கருத்துக்களை வழங்கியதோடு உணவக உரிமையாளர் களின் கேள்விகள் மற்றும் அவர்கள் எதிர்நோக்கிய பிரச்சினைகளுக்கும் தீர்வு வழங்கினர்.











மன்னார் மாவட்டத்தில் உள்ள உணவகங்களில் மக்களின் நலனையும்,சுகாதாரத்தையும் கருத்தில் கொண்டு உணவு தாயரிப்பை முன்னெடுக்க வேண்டும் Reviewed by Vijithan on November 17, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.