அண்மைய செய்திகள்

recent
-

மசகு எண்ணெய் விலை சடுதியாக அதிகரிப்பு

 மத்திய கிழக்கின் முக்கிய எரிசக்தி உற்பத்தியாளர்கள் உற்பத்தியைக் குறைத்ததைத் தொடர்ந்து, சர்வதேச சந்தையில் நேற்று மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 100 டொலருக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. 


ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் போர் காரணமாக, எண்ணெய் மற்றும் எரிவாயு போக்குவரத்திற்கான உலகின் மிக முக்கியமான கடல் பாதைகளில் ஒன்றான ஹோர்முஸ் ஜலசந்தி முடங்கியுள்ளது. 

இந்நிலையில் அதற்குப் பதிலடியாக இந்த உற்பத்தி குறைப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

அதன்படி பிரெண்ட் ரக மசகு எண்ணெய் 18% உயர்ந்து பீப்பாய் ஒன்றின் விலை 108.68 டொலராக விற்பனை செய்யப்படுகின்றது. 

அமெரிக்காவின் WTI ரக மசகு எண்ணெய் சுமார் 20% அதிகரித்து பீப்பாய் ஒன்றின் விலை 108 அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது. 

2022 ஆம் ஆண்டு பெப்ரவரியில் உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்தபோது மசகு எண்ணெய் விலை 100 டொலரைத் தாண்டியது. 

அதற்குப் பிறகு ஏற்பட்ட மிகப்பெரிய விலை உயர்வு இதுவாகும் என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.




மசகு எண்ணெய் விலை சடுதியாக அதிகரிப்பு Reviewed by Vijithan on March 09, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.