அண்மைய செய்திகள்

recent
-

மாகாண மட்ட, தேசியமட்ட போட்டிகளில் சாதனை படைத்த மடு கல்வி வலய மாணவர்கள் கௌரவிப்பு.

 வடக்கு மாகாணத்தில் கடந்த வருடம் இடம்பெற்ற மாகாண மட்டம் மற்றும் தேசிய மட்ட  விளையாட்டுப்  போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மடு கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலை மாணவர்களை கௌரவிக்கும் விளையாட்டு வர்ணங்கள்  (Sports Colours Day)   நிகழ்வு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (10) காலை மடு வலயத்தில் மடு  வலயக்கல்வி பணிப்பாளர் திருமதி ஏ. சி. வொலன்ரைன் தலைமையில் இடம்பெற்றது.


குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக  வடமாகாண கல்வி கலாச்சார விவகாரங்கள் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர்  எம். பற்றிக் டிராஞ்சன் கலந்து சிறப்பித்தார்.


மேலும் கௌரவ விருந்தினராக மன்னார் வலயக் கல்விப் பணிப்பாளர் கே. செல்வன் சிறப்பு விருந்தினராக அந்தனி கேப்ரியல் ஆகியோர் கலந்து கொண்டனர்.


குறித்த நிகழ்வில்  விருந்தினர்கள் மற்றும் வெற்றி பெற்ற மாணவர்கள் மாலை அணிவித்து வரவேற்கப் பட்டனர்.


இதன் போது தேசிய ரீதியில் சாதனை  படைத்த இரண்டு மாணவர்களும், மாகாண மட்டத்தில் வெற்றி பெற்ற 102 மாணவர்களும்,  செயல்பட்டு மகிழ்வோம் நிகழ்வில் வெற்றி பெற்ற 72 மாணவர்களும் விசேட தேவைகளுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு இடம்பெற்ற நிகழ்வில் வெற்றி பெற்ற 6 மாணவர்களும் கௌரவிக்கப்பட்டனர்.


  சாதனையாளர்களுக்கு விருந்தினர்களினால் பதக்கம் அணிவிக்கப்பட்டு,பரிசில்கள் கழங்கி கௌரவிக்கப்பட்டனர்.இதன் போது மாணவர்கள்,ஆசிரியர்கள்,பெற்றோர்கள்,பழைய மாணவர்கள் என பலர் கலந்து














மாகாண மட்ட, தேசியமட்ட போட்டிகளில் சாதனை படைத்த மடு கல்வி வலய மாணவர்கள் கௌரவிப்பு. Reviewed by Vijithan on March 10, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.