அண்மைய செய்திகள்

recent
-

ஈரான் மீதான தாக்குதலில் 140 அமெரிக்க வீரர்கள் காயம்: பென்டகன் அறிவிப்பு

 ஈரான் மீதான அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளின் ஆரம்பத்திலிருந்து இதுவரை சுமார் 140 அமெரிக்க வீரர்கள் காயமடைந்துள்ளதாகவும், அவர்களில் எட்டு பேர் பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளதாகவும் பென்டகன் ஊடகப் பேச்சாளர் ஷான் பார்னெல் நேற்று (10) தெரிவித்தார். 

 

"Operation Epic Fury ஆரம்பமானது முதல் கடந்த 10 நாட்களில் மேற்கொள்ளப்பட்ட தொடர்ச்சியான தாக்குதல்களில் சுமார் 140 அமெரிக்க இராணுவத்தினர் காயமடைந்துள்ளனர்" என பார்னெல் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். 

 

"காயமடைந்தவர்களில் பெரும்பான்மையானோருக்குச் சிறிய அளவிலான காயங்களே ஏற்பட்டுள்ளன. அவர்களில் 108 பேர் ஏற்கனவே பணிக்குத் திரும்பியுள்ளனர். 8 வீரர்கள் தொடர்ந்தும் பலத்த காயமடைந்தவர்களின் பட்டியலில் உள்ளதுடன், அவர்களுக்கு உயர்தர மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன." 

 

உயிரிழப்பு ஏற்படக்கூடிய அல்லது ஆபத்தான நிலையிலுள்ள வீரர்களே 'பலத்த காயமடைந்தவர்களின்' பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் முன்னர் CNN செய்திச் சேவையிடம் தெரிவித்திருந்தார். 

 

இதுவரை இப்போராட்டத்தில் 7 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களில் இறுதியாக உயிரிழந்த வீரரின் உடல், கௌரவ மரியாதைகளுடன் கடந்த திங்கட்கிழமை மாலை டெலாவேரில் உள்ள டோவர் (Dover) விமானப்படைத் தளத்திற்குக் கொண்டு வரப்பட்டது. 

 

தாக்குதல்களின் தீவிரத்தைப் பொறுத்து வீரர்கள் உடனடியாகச் சிகிச்சை பெறாத சந்தர்ப்பங்களும் உள்ளதால், காயமடைந்தவர்களின் எண்ணிக்கை அவ்வப்போது மாறுபடவோ அல்லது அதிகரிக்கவோ வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.







ஈரான் மீதான தாக்குதலில் 140 அமெரிக்க வீரர்கள் காயம்: பென்டகன் அறிவிப்பு Reviewed by Vijithan on March 11, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.