அண்மைய செய்திகள்

recent
-

இலங்கையில் தாறுமாறாக குறையும் தங்கம் விலை; நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி!

 சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள தங்க விலை வீழ்ச்சியின் நேரடிப் பிரதிபலிப்பாக, இலங்கையிலும் இன்றைய தினம் (20) தங்கத்தின் விலை வீழ்ச்சியை பதிவு செய்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.


சர்வதேச சந்தையில் ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 4,720 டொலராக விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி ஒரு அவுண்ஸ் இன்றையதினம் 73.79 டொலராக விற்பனை செய்யப்படுகிறது.



சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்கள்


சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்கள் மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாகவே தங்கம் மற்றும் வெள்ளியின் விலை வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.




அதன்படி இலங்கையில் 24 கரட் தங்கம் ஒரு பவுண் 388,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 357,000 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.


இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 48,500 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 44,626 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.




அதேவேளை நேற்றையதினம் இலங்கையில் தங்கத்தில் விலை 13 ஆயிரம் ரூபாயால் வீழ்ச்சி அடைந்த நிலையில், தங்கத்தின் விலை வீழ்ச்சியை பதிவு செய்துள்ளமை நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.






இலங்கையில் தாறுமாறாக குறையும் தங்கம் விலை; நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி! Reviewed by Vijithan on March 20, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.