அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் பெண்களின் வலிமை துணிவு மற்றும் சாதனைகளை கொண்டாடுவோம் எனும் கருப்பொருளில் நடைபெற்ற சர்வதேச மகளிர் தின நிகழ்வும் சுவரோவிய நிகழ்வும்

 பெண்களின் வலிமை துணிவு மற்றும் சாதனைகளை கொண்டாடுவோம் எனும் கருப்பொருளில் சர்வதேச மகளிர் தின நிகழ்வு இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (8) மாலை மன்னாரில் இடம் பெற்றது.


 மன்னார் நகர சிறுவர் பூங்கா அரங்கில் மன்னார்  குடிசார் அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மன்னார் மாவட்ட பகுதி பெண்கள் அமைப்புகள் கூட்டாக இணைந்து சர்வதேச மகளிர் தின நிகழ்வை முன்னெடுத்திருந்தனர்.


குறித்த நிகழ்வில் விருந்தினர்களாக மன்னார் பிரதேசச்  செயலாளர் உள்ளடங்களாக பலர் கலந்து கொண்டதோடு மகளிர் அமைப்புகளின்  கலந்து கொண்டிருந்தனர். 


குறித்த நிகழ்வில் சாதனைப் பெண்கள் மற்றும் பெண்களோடு தோல் நின்று உழைக்கும் ஆண்களுக்கும்  நினைவுச்சின்னம்  வழங்கிய கௌரவிக்கப்பட்டனர். .

 

இதையடுத்து  கிறீன் பீஸ் சவுத் ஏசியா (GREENPEACE SOUTH ASIA ) அமைப்பின் அனுசரனையுடன்  மன்னார் பிரதான நூலக  சுவரில்  பெண்களால்  வரையப்பட்ட பிரம்மாண்டமான சுவரோவியம் காட்சிப்படுத்தலுக்காக வைபவ ரீதியாக  திறந்து வைக்கப்பட்டது.காலநிலை நீதிக்கான பெண்கள் எனும் தொனிப்பொருளில் குறித்த ஓவியம் பெண்களினால் வரையப்பட்டு   காட்சி படுத்தப் பட்டிருந்தது.


மன்னார் பொது நூலகத்தின் வெளிப்புறச் சுவரில் உருவாக்கப்பட்டுள்ள புதிய சமூக சுவரோவியம், கலை, அறிவியல் மற்றும் சமூகத்தின் குரல்களை ஒன்றிணைத்து, இந்தத் தீவின் வளமான உயிரியல் பல் வகைமையையும் காலநிலை பேரிடர்களுக்கு எதிராக பெண்கள் காட்டும் தலைமையையும் வெளிச்சமிட்டு காட்டு கின்றமை சிறப்பம்சமாகும்.























மன்னாரில் பெண்களின் வலிமை துணிவு மற்றும் சாதனைகளை கொண்டாடுவோம் எனும் கருப்பொருளில் நடைபெற்ற சர்வதேச மகளிர் தின நிகழ்வும் சுவரோவிய நிகழ்வும் Reviewed by Vijithan on March 08, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.