மாகாண சபைத் தேர்தலின் முக்கியத்துவம் குறித்து மன்னாரில் விசேட கலந்துரையாடல்.
உரிய காலத்தில் தேர்தலை நடத்தாமை ஜனநாயக நாட்டில் ஏற்படும் பாதிப்பு, மற்றும் மாகாண சபைத் தேர்தலின் முக்கியத்துவம், அவற்றை நடத்துவதற்கான . அரசு மற்றும் தேர்தல் ஆணையக் குழு - பெப்ரல் (PAFFREL) நிலைப்பாடு தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்றைய தினம் பவ்ரல் அமைப்பின் ஏற்பாட்டில் மன்னாரில் உள்ள தனியார் விடுதியில் இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலில் தேர்தல் முறைமைகள் தொடர்பான விளக்கம், உரிய காலங்களில் தேர்தல் நடத்தாமை, முறையான தேர்தல் நாட்காட்டி முறைமை ஒன்றை அமல்படுத்த நடவடிக்கை எடுத்தல், தேர்தல்களை உரிய காலத்தில் நடைமுறைப்படுத்துவது மற்றும் அழுத்தங்கள் கொடுத்தல் போன்ற விடயங்கள் தொடர்பாக இவ்விசேட கலந்துரையாடலில் ஆராயப்பட்டதோடு தெளிவூட்டல்களும் வழங்கப்பட்டது.
இக்கலந்துரையாடலில் சிவில் சமூகப் பிரதிநிதிகள், சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள், புத்திஜீவிகள், அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள், இளைஞர்கள், பெண்கள், பெண்கள் அமைப்புகளின் பிரதிநிதிகள் போன்ற பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இக் கலந்துரையாடல் பெப்ரல் அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலில் சுஜீவ கயானந்த, தேசிய இணைப்பாளர் எஸ்.முன்னாள் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் மற்றும் தேர்தல் ஆணையக் குழு உறுப்பினருமான எம்.எம். முஹம்மது ஆகியோர் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
Reviewed by Vijithan
on
April 30, 2026
Rating:


No comments:
Post a Comment