லண்டனில் அன்னை பூபதி நினைவு நாளை முன்னிட்டு அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது
Annai Poopathy அவர்களின் 38ஆவது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, இங்கிலாந்தின் 10 Downing Street முன்பாக நேற்று (19.04.2026) அடையாள உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. “நாட்டுப்பற்றாளர் அன்னை பூபதி” அவர்களை நினைவுகூர்ந்து நடத்தப்பட்ட இந்த விழிப்புணர்வு அரசியல் போராட்டம் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அமைதியான முறையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் தமிழீழத்தைச் சேர்ந்த பலர் மற்றும் பல்வேறு தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு, தமிழர்களின் உரிமைகள், சுயநிர்ணயம் மற்றும் அரசியல் நீதி குறித்து கோரிக்கைகளை முன்வைத்தனர். இந்த போராட்டத்தை Movement for Self-Determination of Tamil Eelam (MSDTE) மற்றும் பல தமிழ் அமைப்புகள் இணைந்து ஒழுங்கமைத்திருந்தன. போராட்டத்தின் போது “தமிழரின் தலைவிதி தமிழரின் கையில்” மற்றும் “தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்” போன்ற கோஷங்கள் எழுப்பப்பட்டன. நிகழ்வில் கலந்து கொண்டவர்கள், அன்னை பூபதி அவர்களின் தியாகத்தை நினைவுகூர்ந்து, எதிர்காலத்தில் தமிழர் உரிமைகளுக்கான போராட்டங்களை தொடர்வோம் என்ற உறுதியையும் வெளிப்படுத்தினர்.
லண்டனில் அன்னை பூபதி நினைவு நாளை முன்னிட்டு அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது
Reviewed by Vijithan
on
April 20, 2026
Rating:
Reviewed by Vijithan
on
April 20, 2026
Rating:


No comments:
Post a Comment