பல மாகாணங்களுக்குப் பலத்த மின்னல் எச்சரிக்கை
வளிமண்டலவியல் திணைக்களம் பலத்த மின்னல் தொடர்பிலான எச்சரிக்கை அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களத்தினால் இன்று (03) நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவித்தல், இன்று இரவு 11.00 மணி வரை செல்லுபடியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும், திருகோணமலை, மன்னார், வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களின் சில இடங்களிலும் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழையுடன் பலத்த மின்னல் தாக்கங்கள் ஏற்படுவதற்கான அதிக சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அந்தப் பிரதேசங்களில் தற்காலிகமாகப் பலத்த காற்று வீசக்கூடும் என்பதுடன், மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய விபத்துக்களைக் குறைப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.
பல மாகாணங்களுக்குப் பலத்த மின்னல் எச்சரிக்கை
Reviewed by Vijithan
on
April 03, 2026
Rating:
Reviewed by Vijithan
on
April 03, 2026
Rating:


No comments:
Post a Comment