எரிபொருளுக்கான அரச மானியம் ஜூன் மாதத்துடன் நிறைவு!
எரிபொருளுக்காக அரசாங்கம் வழங்கி வரும் மானியங்கள் ஜூன் மாதத்துடன் நிறைவடைவதாக பெற்றோலிய கூட்டுத்தாபன அதிகாரிகள், அரசாங்க நிதி பற்றிய குழு முன்னிலையில் தெரிவித்துள்ளனர்.
இதன்போது, பொது நிதிக்குழுவின் தலைவர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அதிகாரிகள், எரிபொருள் விலை அதிகரிப்பு குறித்து அரசாங்கம் இதுவரை எந்தவொரு முடிவையும் எடுக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளனர்.
எரிபொருள் நுகர்வைக் குறைப்பதே அரசாங்கத்தின் இலக்காகும் என்றும், அதற்கமையவே எரிபொருள் விலையை உயர்த்துவது போன்ற தீர்மானங்கள் எடுக்கப்பட்டதாகவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கடந்த மே 13 ஆம் திகதி தெரிவித்திருந்தார்.
நுவரெலியா மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு மேலும் கருத்து தெரிவித்திருந்த ஜனாதிபதி, உலகச் சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்துள்ள நிலையில், நாட்டில் ஒரு லீட்டர் டீசலின் விலை 720 ரூபாய் வரை உயர்ந்துள்ளதாகக் குறிப்பிட்டிருந்தார்.
இருப்பினும், அரசாங்கத்தினால் ஒரு லீட்டர் டீசலுக்காக 100 ரூபாய் மானியம் செலவிடப்பட்டு, 392 ரூபாய் என்ற விலைக்கு மக்களுக்கு வழங்கப்படுவதன் மூலமும் கூட்டுத்தாபனம் நட்டத்தை எதிர்கொண்டு வருவதாகவும், இதனை நீண்ட காலத்திற்கு முன்னெடுத்துச் செல்ல முடியாது என்றும் ஜனாதிபதி இங்கு வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
எரிபொருளுக்கான அரச மானியம் ஜூன் மாதத்துடன் நிறைவு!
Reviewed by Vijithan
on
June 13, 2026
Rating:
Reviewed by Vijithan
on
June 13, 2026
Rating:


No comments:
Post a Comment