அண்மைய செய்திகள்

recent
-

விபரங்கள் இல்லாத சீன உணவுகள் - சூப்பர் மார்க்கெட் முற்றுகை

 இலங்கையின் நுகர்வோர் சட்டங்களை மீறி, தயாரிப்பு திகதி, காலாவதியாகும் திகதி அல்லது விநியோகஸ்தரின் விபரங்கள் மற்றும் ஏனைய தரவுகள் எதனையும் உள்ளடக்காமல் பொருட்களை விற்பனை செய்த சீன நிறுவனத்திற்குச் சொந்தமான பல்பொருள் அங்காடி ஒன்றை நுகர்வோர் விவகார அதிகார சபை முற்றுகையிட்டுள்ளது.

 

கொள்ளுப்பிட்டி பகுதியில் நடத்தப்பட்டு வந்த இந்த விற்பனை நிலையத்தில், உள்ளூர் நுகர்வோருக்கும் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ள போதிலும், அவற்றில் என்னென்ன பொருட்கள் அடங்கியுள்ளன என்பதை அவர்கள் அறிந்துகொள்வதற்குப் பொருத்தமான எந்தவொரு மொழியும் பயன்படுத்தப்படவில்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

மேலும், இந்த முற்றுகையின் போது, சீன உணவுகள் இலங்கை நபர்களால் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது.

 

கைப்பற்றப்பட்ட பொருட்கள் மாளிகாகந்த நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், இது தொடர்பில் நுகர்வோர் விவகார அதிகார சபை மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.









விபரங்கள் இல்லாத சீன உணவுகள் - சூப்பர் மார்க்கெட் முற்றுகை Reviewed by Vijithan on June 13, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.