அண்மைய செய்திகள்

recent
-

இலங்கையில் குறையும் தங்க விலை; உற்சாகத்தில் நகைப்பிரியர்கள்!

 இலங்கையில் இன்று (17) நண்பகலின் பின்னர் தங்க விலையில் மாற்றம் பதிவாகியுள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.


அதன்படி, 24 கரட் தங்கம் ஒரு பவுணுக்கு 1,000 ரூபாயால் விலை குறைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய சந்தை நிலவரப்படி, 24 கரட் தங்கம் ஒரு பவுண் 393,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகின்றது.




அதேவேளை, 22 கரட் தங்கம் ஒரு பவுண் 361,500 ரூபாயாக விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிராம் அடிப்படையில், 24 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 49,125 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 45,188 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகின்றது.


அதேவேளை சர்வதேச தங்க சந்தையில் ஏற்பட்டுள்ள விலை மாற்றங்களின் தாக்கம் உள்நாட்டு தங்க விலைகளிலும் பிரதிபலித்து வருவதாக சந்தை தரப்புக்கள் தெரிவிக்கின்றன.





இலங்கையில் குறையும் தங்க விலை; உற்சாகத்தில் நகைப்பிரியர்கள்! Reviewed by Vijithan on June 17, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.