அண்மைய செய்திகள்

recent
-

எல் நினோ நிலை அடுத்த ஆண்டின் முதல் காலாண்டு வரை நீடிக்க 97% வாய்ப்பு

 தற்போது நிலவும் எல் நினோ (El Niño) நிலை அடுத்த ஆண்டின் முதல் காலாண்டு வரை நீடிப்பதற்கான சாத்தியக்கூறு 97 சதவீதமாக அதிகரித்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 


எதிர்வரும் மாதத்தில் வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களில் மழை அற்ற வறட்சியான வானிலை தொடர்ந்து நிலவும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 


இன்று (20) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அதன் பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமான்ன இதனைத் தெரிவித்தார். 


"இந்த எல் நினோ நிலைமை அடுத்த ஆண்டின் தொடக்கம் வரை நீடிக்கும் என்பதில் 97% உலகளாவிய கணிப்புகள் உள்ளன. அடுத்த ஆண்டின் பெப்ரவரி, மார்ச், ஏப்ரல் ஆகிய மூன்று மாதங்களில் மழை கணிசமாகக் குறையும். வெப்பநிலை அதிகரிக்கும். மனித உடலால் தாங்க முடியாத அளவுக்கு இந்த நிலைமை செல்லக்கூடும்..." என்றார்.






எல் நினோ நிலை அடுத்த ஆண்டின் முதல் காலாண்டு வரை நீடிக்க 97% வாய்ப்பு Reviewed by Vijithan on August 20, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.