அண்மைய செய்திகள்

recent
-

சிறுவர் பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு பரிகாரி கண்டல் பேருந்து நிலையத்தில் இடம்பெற்ற சிறுவர் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி.

 ஜீவோதய சிறுவர் அபிவிருத்தி நிலையத்தின் ஏற்பாட்டில் சிறுவர் பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு சிறுவர் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி  பரிகாரி கண்டல் பேருந்து நிலையத்தில் இசெவ்வாய்க்கிழமை (18) மாலை  இடம்பெற்றது.


சிறுவர் பாதுகாப்பு மற்றும் சிறுவர் உரிமைகள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் குறித்த பேரணி  இடம்பெற்றது.


  குறிப்பாக சிறுவர்களுக்கு பாதுகாப்பான சூழல், பராமரிப்பு, கல்வி மற்றும் உரிய உரிமைகள் கிடைப்பதை உறுதி செய்வது பெற்றோர்கள் மட்டுமல்லாது ஒவ்வொருவரினதும் பொறுப்பாகும்.


  இப்பேரணியில் மூலம் சிறுவர் துஷ்பிரயோகம், மற்றும் வன்முறைகளுக்கு எதிராக குரல் கொடுப்பதோடு,ஒவ்வொரு சிறுவரும் பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ வேண்டியதன் அவசியத்தையும் சமூகத்திற்கு எடுத்துரைக்கப்பட்டது.


குறித்த விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொண்ட சிறுவர்கள் பல்வேறு வாசகங்கள் எழுதிய பதாகைகளை   ஏந்தியவாறு காணப்பட்டனர்.


 குறித்த நிகழ்வில்  அரச உத்தியோகத்தர்கள் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் நலன்விரும்பிகள் கலந்து கொண்டனர்.
















சிறுவர் பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு பரிகாரி கண்டல் பேருந்து நிலையத்தில் இடம்பெற்ற சிறுவர் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி. Reviewed by Vijithan on August 19, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.