மடு பிரதேச செயலகமும் பிரதேச பண்பாட்டுப் பேரவையும் இணைந்து நடத்திய பண்பாட்டுப் பெருவிழாவும் மடுக்கீற்று பிரதேச மலர் வெளியிடும்
வடக்கு மாகாண கல்வி அமைச்சின் பண்பாட்டலுவல்கள் அலகின் அனுசரணையில் மடு பிரதேச செயலகமும் பிரதேச பண்பாட்டுப் பேரவையும் இணைந்து நடத்திய பண்பாட்டுப் பெருவிழாவும் மடுக்கீற்று பிரதேச மலர் வெளியிடும் புதன்கிழமை (5) மாலை பெரியபண்டிவிரிச்சான் மரிய கொறற்றி தேவாலயத்தின் மைதானத்தில் சிறப்புற நடைபெற்றது
மடு பிரதேச செயலாளர் அமல்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க,கனகேஸ்வரன் பிரதம விருந்தினராகவும்,சிறப்பு விருந்தினராக வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அலகின் பிரதிப் பணிப்பாளர் திருமதி தர்ஷினி நிதர்சனும், கெளரவ விருந்தினர்களாக மன்னார் மாவட்ட சிரேஷ்ட உத்தியோகத்தர் நித்தியானந்தன் மற்றும் மன்கலைச்சுரபி வாரித்தம்பி நவரத்தினம் ஆகியோரும் கலந்து கொண்டனர்
இவர்களுடன் பெரியபண்டிவிரிச்சான் பங்குத்தந்தை, பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள்,பிரதேச கலைஞர்கள், பிரதேச செயலக அலுவலர்கள் ,பொதுமக்கள் என பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்
பாரம்பரிய முறைப்படியான வரவேற்பை தொடர்ந்து கலைநிகழ்வுகள், மடுக்கீற்று சிறப்பு நூல் வெளியீடு, கலைஞர் கௌரவம், கலைமன்றம் போட்டி பரிசளிப்பு என்பனவும் இடம்பெற்றன.
Reviewed by Vijithan
on
August 06, 2026
Rating:








No comments:
Post a Comment