நேபாள வௌ்ள அனர்த்தம் பலி எண்ணிக்கை 95 ஆக உயர்வு
நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வௌ்ளப் பெருக்கினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 95 ஆக உயர்வடைந்துள்ளது.
நேபாள சுற்றுலாச் சபையின் அண்மைய தகவல்படி, 61 நேபாளப் பிரஜைகள் மற்றும் 341 வெளிநாட்டுப் பிரஜைகள் உட்பட 403 பேர் தொடர்ந்தும் காணாமல் போயுள்ளனர்.
காணாமல் போனவர்களில் 200 பேர் பெண்கள் என்றும் 203 பேர் ஆண்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காணாமல் போன வெளிநாட்டவர்கள் 26 வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் என அறியப்படுகிறது.
இந்தியாவிலிருந்து 133 பேரும், அமெரிக்காவிலிருந்து 47 பேரும், பிரித்தானியாவின் 33 பேரும் காணாமல் போயுள்ளனர்.
சுற்றுலா ஏற்பாட்டாளர்களை மேற்கோள் காட்டி சுற்றுலாச் சபை வெளியிட்டுள்ள தகவலின்படி, பெரும்பாலான பயணிகள் இந்தியா மற்றும் நேபாள எல்லைக்கு அருகிலுள்ள மானசரோவருக்குச் செல்லும் வழியிலேயே இருந்துள்ளனர்
Reviewed by Vijithan
on
August 26, 2026
Rating:


No comments:
Post a Comment