மன்னாரில் சிறப்பாக இடம்பெற்ற புத்தாக்கத் திருவிழா.
மாணவர்களின் கல்வித் துறையை மேம்படுத்தும் வகையிலும் மாணவர்கள் மத்தியில் காணப்படும் புத்தாக்க திறனை வெளிக்கொண்டு வரும் வகையில் செயல்படும் யாழ் ஐடி ஹப் (Yarl IT Hub) நிறுவனத்தின் ஏற்பாட்டில் மாபெரும் புத்தாக்கத் திருவிழா மன்னார் நகரசபை மண்டபத்தில் இன்று(6) காலை 9.30 மணி அளவில் ஆரம்பமானது.
குறித்த புத்தாக்க கண்காட்சி பாடசாலை மாணவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பயன்பெறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டது.
இதன் போது ரோபோடிக்ஸ் அறிமுகம் , மாணவர்களின் புத்தாக்க கண்காட்சி, AI அனுபவக் கற்கைகள்,அறிவுத்திறன் விளையாட்டுகள் என்பன இடம் பெற்றது.
குறித்த நிகழ்வில் மன்னார் மாவட்டத்தில் உள்ள பாடசாலை மாணவர்கள் உருவாக்கப்பட்ட புத்தாக்கங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டதோடு மாணவர்களும் தெளிவான விளக்கத்தை வழங்கினர்.
இதன் போ பாடசாலை மாணவர்கள்,ஆசிரியர்கள் என பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
Reviewed by Vijithan
on
August 06, 2026
Rating:


No comments:
Post a Comment