அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் விடுத்துள்ள எச்சரிக்கை!
நிலவும் மழையுடனான வானிலை குறித்து அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
நாட்டின் பல பகுதிகளில் தற்போது மழை பெய்து வருவதாகவும், 100 மி.மீ. க்கும் அதிகமான மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளதாகவும் அந்த நிலையத்தின் பணிப்பாளரும் ஊடகப் பேச்சாளருமான பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.
அத்துடன், தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனமும் பல மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுத்துள்ளதால், இது குறித்து பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
"குறிப்பாக மண்சரிவு அறிகுறிகள் குறித்து அவதானம் செலுத்துங்கள். உங்கள் பகுதியில் மரங்கள், மின் கம்பங்கள் சரிதல், நிலத்தில் வெடிப்புகள் ஏற்படுதல், சேறு கலந்த புதிய நீர் ஊற்றுகள் தோன்றுதல் மற்றும் நிலவும் நீர் ஊற்றுகள் வற்றிப்போதல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக விழிப்புடன் இருப்பதுடன், அத்தகைய அறிகுறிகளைக் கண்டவுடன் அப்பகுதிகளிலிருந்து தற்காலிகமாக வெளியேறுவது மிகவும் முக்கியமானது" என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Reviewed by Vijithan
on
September 20, 2026
Rating:


No comments:
Post a Comment