அண்மைய செய்திகள்

recent
-

வவுனியாவில் ஒரே வீட்டிற்குள் இருந்து தாய் மற்றும் மகனின் சடலங்கள் மீட்பு.

காயங்களுடன் தாயின் சடலம் மீட்பு..! மகனும் தூக்கில்தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு….!

வவுனியா தோணிக்கல் பகுதியில் கத்திக்குத்துக்கு இலக்காகிய நிலையில் தாயின் சடலம் வீட்டின் வாசலில் இருந்து மீட்கப்பட்டுள்ளதுடன் அறை ஒன்றில் தூக்கில்தொங்கிய நிலையில் அவரது பெறாமகனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டது. பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த இளைஞர் அவரது தாயை கத்தியால் குத்திவிட்டு தான் தற்கொலை செய்திருக்கலாம் என பொலிசார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். 

சம்பவம் தொடர்பாக தடயவியல் பொலிசாரின் உதவியுடன் வவுனியா குற்றத்தடுப்பு பொலிசார் பல்வேறு கோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த சம்பவத்தில் தோணிக்கல் பகுதியை சேர்ந்த அலஸ்கிறின் வயது 65என்ற பெண்ணும் அவரது பெறாமகனான அயந்தன் வயது 35 என்ற இளைஞருமே சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்










வவுனியாவில் ஒரே வீட்டிற்குள் இருந்து தாய் மற்றும் மகனின் சடலங்கள் மீட்பு. Reviewed by Vijithan on September 19, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.