அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் 2 வது நாளாக விமர்சையாக நடைபெற்ற உலக சுற்றுலா தின நிகழ்வு-பல ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பு.

 உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு வடக்கு மாகாண சுற்றுலா பணியகம், மன்னார் மாவட்டச் செயலகம் மற்றும் வடக்கு மாகாண தொழில்துறை மன்றம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த உலக சுற்றுலா தினம், உணவுத் திருவிழா   2 வது நாள்  நிகழ்வு நேற்று சனிக்கிழமை (26) மாலை மன்னார் உப்புக்குளம் அல்பத்தா விளையாட்டு  மைதானத்தில் நடைபெற்றது.


 வடமாகாண  சுற்றுலா பணியகத்தின் தலைவர் கலாநிதி ஜெகநாதன் விவேகானந்தன்   தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக  புத்தசாசன மற்றும் கலாச்சார அமைச்சர் பேராசிரியர் கலாநிதி.  சுனில் செனவி கலந்து கொண்டார்.


மேலும் விருந்தினர்களாக வடமாகாண பிரதம செயலாளர் திருமதி தனுஜா முருகேசன்,உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஏ.சோதிநாதன்,மன்னார் நகர பிரதேச செயலாளர் கே.காந்தீபன் ஆகியோர்   கலந்து கொண்டனர்.


குறித்த நிகழ்வில் பல ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.குறித்த நிகழ்வில் பல்வேறு நிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டது.


உலக சுற்றுலா தின மற்றும் உணவுத் திருவிழா இறுதி நாள் நிகழ்வுகள் இன்று  ஞாயிறு  மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை உப்புக்குளம் அல் பதாஹ் விளையாட்டு மைதானத்தில் இடம் பெற உள்ளன.






















 



மன்னாரில் 2 வது நாளாக விமர்சையாக நடைபெற்ற உலக சுற்றுலா தின நிகழ்வு-பல ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பு. Reviewed by Vijithan on September 27, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.