மன்னார் Soft Ball Premier League 2027 – புதிய அணி உரிமையாளர்களுக்கான விண்ணப்பங்கள்!
மன்னார் Soft Ball Premier League (MSPL) இன் முதல் சீசன் பிரமாண்டமாக இடம்பெற்று பலரது பாராட்டுகளையும் பெற்றிருந்த நிலையில், தற்போது அதன் இரண்டாவது சீசனான MSPL 2027 தொடருக்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, புதிய அணிகளை கொள்வனவு செய்ய ஆர்வமுள்ள அணி உரிமையாளர்களுக்கான விண்ணப்ப விநியோகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
MSPL 2027 தொடரில் மேலும் 4 புதிய அணி உரிமையாளர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.
விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்ளும் ஆர்வமுள்ளவர்கள், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஒக்டோபர் 3 திகதி மாலை 5.00 மணிக்கு முன்னதாக சமர்ப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக விபரங்கள் விண்ணப்பப் படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், விண்ணப்பப் படிவங்களை AA Sports அலுவலகத்தில் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது
Reviewed by Vijithan
on
September 29, 2026
Rating:


.jpeg)


No comments:
Post a Comment