அண்மைய செய்திகள்

recent
-

வடமாகாண ஹாக்கி போட்டியில் மன்னார் அணி இரண்டாம் இடம்

 மன்னார், செப். 05: அருண் ராஜ் தலைமையிலான மன்னார் மாவட்ட ஹாக்கி அணி, வடமாகாணங்களுக்கு இடையிலான ஹாக்கி போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது.


தாழ்வுபாடு இராயப்பு ஜோசப் ஆண்டகை மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியின் முதல் சுற்றில் மன்னார் அணி வவுனியா அணியை எதிர்கொண்டது. இப்போட்டியில் வேதரூபனின் சிறப்பான ஆட்டத்தின் மூலம் மன்னார் அணி இரண்டு கோல்களைப் பதிவு செய்து வெற்றியீட்டி அரையிறுதிக்கு முன்னேறியது.


அரையிறுதிப் போட்டியில் யாழ்ப்பாணம் அணியை எதிர்கொண்ட மன்னார் அணி, ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் கோல் எதுவும் பெறாத நிலையில், பெனால்டி ஷூட்-அவுட் முறையில் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் நிலைக்குச் சென்றது.


இதன்போது மன்னார் அணியின் பேற்றுக்காப்பாளர் கிளின்டன் சிறப்பான திறமையை வெளிப்படுத்தி, அணியின் வெற்றிக்கு முக்கிய பங்களிப்பை வழங்கினார்.


இதனைத் தொடர்ந்து நடைபெற்ற இறுதிப்போட்டியில் மன்னார் அணி கிளிநொச்சி அணியை எதிர்கொண்டது. விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியிலும் ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் கோல் எதுவும் பெறவில்லை.


இதனால் மீண்டும் பெனால்டி ஷூட்-அவுட் முறையில் வெற்றியாளர் தீர்மானிக்கப்பட்ட நிலையில், மன்னார் அணி தோல்வியைத் தழுவி இரண்டாம் இடத்தைப் பெற்றுக்கொண்டது.


இந்நிலையில், மன்னார் மாவட்ட அணி சார்பாக இப்போட்டியில் பங்கேற்ற அனைத்து வீரர்களும் ஒரே கழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்க சிறப்பம்சமாகும்.


மேலும், மன்னார் மாவட்டத்தில் ஹாக்கி விளையாட்டை அறிமுகப்படுத்தி வளர்த்தெடுத்த பாடசாலையின் முன்னாள் உடற்கல்வி ஆசிரியர் திரு. மதியழகன் அவர்களுக்கு இந்த வெற்றியை அர்ப்பணிப்பதாக அணியினர் தெரிவித்துள்ளனர்.


மன்னார் அணி இதற்கு முன்னர் இருமுறை வடமாகாண ஹாக்கி சாம்பியனாகத் தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இம்முறை இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ள போதிலும், இந்தச் சாதனை மன்னார் ஹாக்கி வரலாற்றில் மேலும் ஒரு முக்கியமான பதிவாக அமைந்துள்ளது.



வடமாகாண ஹாக்கி போட்டியில் மன்னார் அணி இரண்டாம் இடம் Reviewed by Vijithan on September 07, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.