அண்மைய செய்திகள்

recent
-

வெற்றிச்செல்வி எழுதிய தீபகச் செல்வன் வாழ்க்கை வரலாற்று நாவல் வெளியீடு.

 வெற்றிச்செல்வி எழுதிய தீபகச் செல்வன் வாழ்க்கை வரலாற்று நாவல் வெளியீடு நேற்று வெள்ளிக்கிழமை (4)  மாலை 6  மணியிலிருந்து 9 மணி வரை அடம்பனில்  கூட்டுறவு அபிவிருத்தி சங்க மண்டபத்தில்  எழுத்தாளரும் வெளியீட்டாருமான யோ.புரட்சி    தலைமையில் விழா நடைபெற்றது.


 சுடரேற்றைத் தொடர்ந்து அகவணக்கம் நடைபெற்றது.

 

தொடர்ந்து நூல் வெளியீட்டுரை யை நூலகம் நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அலுவலர்,திருமதி றஞ்சுதமலர் நந்தகுமார்   நிகழ்த்தினார்.தொடர்ந்து தீபகச் செல்வன் குடும்பத்தின் பெற்றோர், சகோதரர்கள், துணையாள், பிள்ளைகள் யாவரும் சேர்ந்து நூலை வெளியிட்டு வைத்தனர்.


வருகையாளர்களுக்கானன நூல்கள் நூலாசிரியரும் மூலக்கதையாளரும் நூல்கள் வழங்கினர்.நூல் நயப்புரை மடு வலய கல்வித் திணைக்கள அபிவிருத்தி உத்தியோகத்தர்  பிலிப் நேரில் பிரிட்டோ வழங்கினார்.


நூலின் மூலக் கதையாளர் தீபகச் செல்வன் அவர்களும் நூலாசிரியர் வெற்றிச்செல்வி அவர்களும் இணைந்து நன்றியுரை யும்  வழங்கினர்.குறித்த நூல் வெளியீட்டு விழாவில் நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.














வெற்றிச்செல்வி எழுதிய தீபகச் செல்வன் வாழ்க்கை வரலாற்று நாவல் வெளியீடு. Reviewed by Vijithan on September 05, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.