அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் விமர்சையாக ஆரம்பமான உலக சுற்றுலா தின நிகழ்வு-ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பு.

 உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு, வடக்கு மாகாண சுற்றுலா பணியகம், மன்னார் மாவட்டச் செயலகம் மற்றும் வடக்கு மாகாண தொழில்துறை மன்றம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த உலக சுற்றுலா தினம், உணவுத் திருவிழா    முதலாம் நாள் நிகழ்வு இன்று   வெள்ளிக்கிழமை (25) மாலை மன்னார் உப்புக்குளம் அல்பத்தா விளையாட்டு  மைதானத்தில் நடைபெற்றது. 


 வடமாகாண  சுற்றுலா பணியகத்தின் தலைவர் கலாநிதி ஜெகநாதன் விவேகானந்தன்   தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண  ஆளுநர் என்.வேதநாயகன் கலந்து கொண்டார்.


மேலும் விருந்தினர்களாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன்,மன்னார் நகர முதல்வர் டானியல் வசந்தன்,வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர்,உட்பட திணைக்கள தலைவர்கள் உள்ளடங்களாக பலர் கலந்து கொண்டனர்.


இதன் போது ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்ட ஆளுநர் உள்ளடங்களாக விருந்தினர்கள் உள்ளூர் உணவு உற்பத்திகள் மற்றும் கைவினைப் பொருட்கள் கண்காட்சியை பார்வையிட்ட பின்னர் இடம்பெற்ற   நிகழ்வில்  கலந்து கொண்டனர்.


குறித்த நிகழ்வில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.குறித்த நிகழ்வில் பல்வேறு நிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டது.


உலக சுற்றுலா தின மற்றும் உணவுத் திருவிழா நிகழ்வுகள் சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரு தினங்களும் மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை உப்புக்குளம் அல் பதாஹ் விளையாட்டு மைதானத்தில் இடம் பெற உள்ளன.


குறித்த நிகழ்வானது மன்னார் கீரி கடற்கரையில்  ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில்  கடும் காற்று காரணமாக   மன்னார் உப்புக்குளம் அல் பதாஹ் விளையாட்டு மைதானத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

















மன்னாரில் விமர்சையாக ஆரம்பமான உலக சுற்றுலா தின நிகழ்வு-ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பு. Reviewed by Vijithan on September 26, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.