மன்னார் முருங்கன் பகுதியில் புதிய விதை விற்பனை நிலையம் ஆரம்பம்
மன்னார் – முருங்கன் பகுதியில் விவசாயிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் புதிய விதை விற்பனை நிலையம் ஒன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் தங்களது விவசாய நிலங்களுக்கு ஏற்ற தரமான விதை நெல்லை இலகுவாகப் பெற்றுக்கொள்ளும் வகையில் இந்த நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
Sennal Agro PVT LTD நிறுவனத்தின் கீழ் இயங்கும் இந்த விதை விற்பனை நிலையத்தின் ஊடாக, விவசாய காலநிலைக்கு ஏற்ற பல்வேறு வகையான விதைகளை விவசாயிகள் பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விதை விற்பனை நிலையம் நேற்று மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வொன்றின் போது வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.
நிகழ்வில் மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், நானாட்டான் பிரதேச செயலாளர், பிரதேச சபை தலைவர் மற்றும் உறுப்பினர்கள், விவசாயத் திணைக்கள பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
இந்த புதிய விதை விற்பனை நிலையத்தின் ஊடாக மன்னார் மாவட்ட விவசாயிகளுக்கு தரமான விதைகளை இலகுவாகப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன், விவசாய நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்துவதற்கும் இது பங்களிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Reviewed by Vijithan
on
October 08, 2026
Rating:






No comments:
Post a Comment