பாம்பன் விசைப்படகு மீனவர்கள் வலையில் சிக்கிய பெறுமதியான மீன்கள்- 3 லட்சத்து 67 ஆயிரம் ரூபாவிற்கு விற்பனை.
பாம்பன் மீனவர் வலையில் சிக்கிய 105 கிலோ எடை கொண்ட அரிய வகையான ஏழு மீன்கள் இந்திய மதிப்பில் 3 லட்சத்து 67 ஆயிரம் ரூபாவுக்கு விற்பனையானது.
இதனால் பாம்பன் விசைப்படகு மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் இருந்து நேற்று (20) 90-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.வடகிழக்கு பருவமழை தொடங்கியதையடுத்து மன்னார் வளைகுடா உள்ளிட்ட தெற்கு கடல் பகுதியில் கனமழை பெய்ததால் மீனவர்களுக்கு நல்ல மீன்பாடு கிடைத்ததால் மீன் பிடித்து விட்டு இன்று (21) மீனவர்கள் மகிழ்ச்சியுடன் கரை திரும்பினர்.
இதில் தங்கச்சிமடத்தை சேர்ந்த டிட்டோ என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் 5 கூரல் மீனும், மற்றொறுவர் படகில் 2 கூரல் மீன்கள் என மொத்தமாக ஏழு கூரல் மீன்கள் சிக்கியதுஏழு கூரல் மீனகளும் மொத்தமாக 105 கிலோ எடை கொண்ட இந்த மீன்கள் கிலோ ரூ.3500 வீதம், இந்திய மதிப்பில் 3 லட்சத்து 67 ஆயிரம் ரூபாவுக்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இந்த கூறல் மீனை உணவுக்காக பயன் படுத்துவதில்லை.
கூறல் மீனின் வயிற்று பகுதியில் காற்றுப்பை ரப்பர் டியூப் போன்ற வடிவத்தில் (fish maws) நெட்டி காணப்படும். இந்த நெட்டியை பீர், ஒயின் போன்ற மது பானங்கள் மற்றும் ஜெல்லி மிட்டாய் போன்றவைகளை சுவையாகவும், கெட்டு போகாமல் இருக்க பயன்படுத்துகின்றனர்.
கிழக்கு ஆசிய நாடுகளில் இந்த நெட்டிகளை கொண்டு விலை உயர்ந்த சூப் தயாரிக்க பயன்படுத்துவதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் பாம்பன் விசைப்படகு மீனவர் பிடித்த ஏழு கூரல் மீன்களையும் 3 லட்சத்து 67 ஆயிரம் ரூபாவுக்கு விற்பனையானதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Reviewed by Vijithan
on
October 21, 2026
Rating:

.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)

No comments:
Post a Comment