அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மாவட்டம் கட்டுக்கரை குளத்தின் கீழ் 2026/2027 ஆம் ஆண்டிற்கான பெரும்போக பயிர்ச் செய்கைக்கான முதல் கட்ட நீர் விநியோகம் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைப்பு.

 மன்னார் மாவட்டம்  கட்டுக்கரை குளத்தின் கீழ்  2026/2027 ஆம் ஆண்டிற்கான பெரும்போக பயிர்ச்செய்கைக்கான முதல் கட்ட நீர் விநியோகம்   விவசாயக் குழு கூட்ட தீர்மானங்கள் படி இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (23) காலை 10.30 மணியளவில் சர்வமத தலைவர்கள் ஆசியுடன் திறந்து விடப்பட்டுள்ளது.


மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில்,விவசாய திணைக்கள பணிப்பாளர் , திணைக்கள அதிகாரிகள் இணைந்து வைபவ ரீதியாக நீர் விநியோகத்தை திறந்து வைத்தனர்.



 இம்முறை மன்னார் மாவட்டத்தில் ஒட்டுமொத்தமாகச் சுமார் 60, ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் பெரும்போக நெற்செய்கை  மேற்கொள்ளப்பட உள்ளது. 


அதற்கமைய முதல் கட்டமாக நீர்  வினியோகம் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை(23)  வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. 


 காலநிலை மாற்றங்களை கருத்தில் கொண்டு விவசாயிகள் அனைவரும் குறுகிய காலத்தில் (3 அல்லது 3.5 மாதங்கள்) பலன் தரக்கூடிய நெல் இனங்கள் பயிரிடுமாறு   கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 













மன்னார் மாவட்டம் கட்டுக்கரை குளத்தின் கீழ் 2026/2027 ஆம் ஆண்டிற்கான பெரும்போக பயிர்ச் செய்கைக்கான முதல் கட்ட நீர் விநியோகம் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைப்பு. Reviewed by Vijithan on October 23, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.