அண்மைய செய்திகள்

recent
-

தமிழர் பகுதியில் சிறுவர் தினத்தில் உயிரை மாய்த்துக் கொண்ட சிறுமி ; மரணத்திற்கான காரணம் குறித்து விசாரணை

 கிளிநொச்சி, உருத்திரபுரம் பகுதியில் 17 வயதான சிறுமி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.





மேலதிக விசாரணை

சிறுவர் தினமான நேற்று (01) இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


உருத்திரபுரம் பகுதியைச் சேர்ந்த 17 வயதான சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.




சிறுமி தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதைத் தொடர்ந்து, சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.


சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்ததுடன், சிறுமியின் சடலம் தொடர்பான மேலதிக சட்ட நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளனர்.


எனினும், சிறுமி தற்கொலை செய்துகொண்டமைக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.


இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.






தமிழர் பகுதியில் சிறுவர் தினத்தில் உயிரை மாய்த்துக் கொண்ட சிறுமி ; மரணத்திற்கான காரணம் குறித்து விசாரணை Reviewed by Vijithan on October 02, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.