அண்மைய செய்திகள்

recent
-

செம்மணி மனித புதைகுழி, அகழ்வில் மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடுகள் தொடர்பாக பேராசிரியர் சமர்ப்பித்த அறிக்கை கண்டிக்கத்தக்கது.

 செம்மணி மனித புதைகுழி க்கு சர்வதேச விசாரணை  கோரி எதிர்வரும் 17 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற உள்ள போராட்டத்திற்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு வழங்க வேண்டும் என   மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்க தலைவி   மனுவல் உதயச்சந்திரா வேண்டுகோள் விடுத்துள்ளார்.


மன்னாரில் இன்று புதன்கிழமை (11) மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.


அவர் மேலும் தெரிவிக்கையில்,,,,


 செம்மணி மனித புதைகுழி, அகழ்வில் மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடுகள் தொடர்பாக பேராசிரியர்   சமர்ப்பித்த அறிக்கையில் நோயால் இறந்த  நபர்களை  தான் கொண்டு வந்து புதைத்து உள்ளதாக தெரிவித்துள்ளார்.


இவ்வாறு நோயால் இறந்தவர்களை புதைத்திருந்தால் எவ்வாறு ஆடைகள் இன்றியும், கயிற்றினால் கட்டியும், கடுமையாக தாக்கி உடல் பாகங்கள் உடைக்கப்பட்டும்,  தலையில் காயங்கள், மற்றும் குழந்தைகள்,உள்ளடங்களாக அனைவரையும் எவ்வாறு குறித்த இடத்தில் புதைத்து  இருக்க முடியும்.


இவ்வாறு நோயால் இறந்தவர்களைப் புதைத்து இருந்தால் வைத்திய சாலையினால் அவர்களின் மரணத்திற்கு காரணம் என்ன என்பதற்கான அறிக்கை கொடுத்திருப்பார்கள்.


இவ்வாறு எந்த அறிக்கைகளும் கொடுக்கப்படவில்லை.மன்னாரில் உள்ள மனித புதை குழிகளை எடுத்துக் கொண்டாலும் அவர் மாறான கருத்துக்களை கூறியுள்ளார்.குறிப்பாக ஒல்லாந்தர் காலத்து எலும்புக்கூடுகள் என்றும் அவர் கூறியுள்ளார்.பேராசிரியர் ஒவ்வொரு இடங்களிலும் மாறுபட்ட கருத்துக்களை கூறி வருகிறார்.


 அதே மாதிரிதான்  தற்போது செம்மணி   மனித புதைகுழி தொடர்பாகவும் அறிக்கைகளை விட்டு வருகிறார்.ஆனால் ஒரு ராணுவ வீரர் சொல்லியிருக்கிறார்  அந்த செம்மணி புதைகுழியில், 1990 ஆம் 1995 ஆம் ஆண்டு காலப்பகுதியில் யுத்த காலத்தில் சுமார் 600 பேர் வரை கொன்று  புதைத்து உள்ளதாக தெரிவித்திருந்தார்.


 அப்படி சொன்ன இடத்தில் இன்றைக்கு 583 எலும்புக்கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.அப்படி என்றால் இன்னும் எத்தனை மனித எலும்புக்கூடுகள் குறித்த புதைகுழி பகுதியில் இருக்க வேண்டும்.அரசாங்கத்தை காப்பாற்றும் வகையில் அவர் இவ்வாறான கருத்துக்களை கூறி வருகிறார்.







அரசாங்கங்கள் மாறி மாறி வந்தாலும் அந்த அரசை காப்பாற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  அரசையும்,இராணுவத்தையும் காப்பாற்றும் நோக்கில் இந்த அறிக்கைகள் விடப்பட்டு வருகிறது.இதனை நாங்கள் ஏற்கவும்,நம்பவும் முடியாது.


காணாமல் ஆக்கப்பட்ட சுமார் 17 ஆயிரம் உறவுகளை கையில் ஒப்படைத்தனர்.மேலும் வீடுகளிலும்,வீதிகளிலும் வைத்து பிடித்து  சென்றுள்ளனர்.அகதி முகாம்களில் இருந்த ஆண்களையெல்லாம் அவர்கள் கொண்டு  சென்றனர்.அந்த 17  ஆயிரம்  உறவுகளுக்கும், இதுவரையிலேயும் என்ன நடந்தது என்று சொல்லி எங்களுக்குத் தெரியாது.


காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளுக்காக ஒவ்வொரு வருடமும் வீதியில் நின்று நாங்கள் போராடி வருகிறோம்.எங்களுடைய பிள்ளைகளுக்கு என்ன நடந்தது? எங்களுடைய பிள்ளைகள் உயிரோடு இருக்கிறார்களா? இல்லையா? என்று சொல்லி நாங்கள் கேட்டுக் கொண்டே இருக்கிறோம். 


 இதுவரை எங்களுக்கு ஒரு பதில் தராமல், இன்றைக்கு அவர் அறிக்கை வெளியிட்டு இருக்கிறார், அது நோயால் இறந்தார்கள் என்று.

எனவே எங்களுக்கு உள்நாட்டு பொறிமுறையில்  நம்பிக்கை இல்லை.உள்நாட்டிலே எங்களுக்கு விசாரணை வேண்டாம் .  நாங்கள் இன்றைக்கு சர்வதேசத்தை நாடி நிற்கின்றோம். சர்வதேசம்  தலையீடு  செய்தால் மாத்திரமே   ஒரு நீதி நியாயம்  கிடைக்கும். 


எங்களுக்கு கட்டாயம், இதைப் பார்த்துக் கொண்டிருக்கும் , தமிழ் தேசியத்தை நாடி நிற்கும் ஒவ்வொரு உறவுகளும் எதிர்வரும்  17ஆம் தேதி (17-11-2026)  காலை  10 மணிக்கு   யாழ்ப்பாணம் அரியாலை தபால் கட்ட சந்ததியிலிருந்து, செம்மணி புதைகுழி வரையும் நடை பவனியிலே  கவனயீர்ப்பு போராட்டம்  முன்னெடுக்க இருக்கிறோம்.


இன்னும் எத்தனையோ எலும்புக்கூடுகள் இருக்கிறது .எனவே செம்மணி மனித புதைகுழி க்கு சர்வதேச விசாரணை கோரி முன்னெடுக்கப்பட உள்ள போராட்டத்திற்கு மாணவர்கள்,அரசியல் பிரதிநிதிகள்,பல்கலைக்கழக மாணவர்கள்,மனித உரிமை செயல்பாட்டாளர்கள் அனைவரும் அணி திரண்டு ஆதரவு வழங்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.





செம்மணி மனித புதைகுழி, அகழ்வில் மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடுகள் தொடர்பாக பேராசிரியர் சமர்ப்பித்த அறிக்கை கண்டிக்கத்தக்கது. Reviewed by Vijithan on November 11, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.