அண்மைய செய்திகள்

recent
-

களுத்துறை சிறையில் தற்கொலைக்கு முயன்ற கைதி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

 களுத்துறை சிறைச்சாலையில் தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்ற கைதியொருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாகக் களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

இவ்வாறு உயிரிழந்தவர் மொணராகலை, வெலியாய பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய நபரொருவர் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

 

போதைப்பொருள் குற்றச்சாட்டு தொடர்பில் பாணந்துறை நீதிவான் நீதிமன்றத்தினால் ஒக்டோபர் 31 ஆம் திகதி இவர் களுத்துறை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டதாகக் குறிப்பிடப்படுகிறது.

 

உயிரிழந்த கைதி சிறைச்சாலையின் கழிப்பறைய ஒன்றில் தூக்கிட்டுத் தற்கொலை செய்ய முயன்ற போது, ஏனைய கைதிகள் சிலர் அதனைக் கண்டு அவரைக் காப்பாற்றியுள்ளனர். அதன் பின்னர் குறித்த கைதியை சிறைச்சாலை அதிகாரிகள் நாகொடை போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

 

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே குறித்த கைதி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலைப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

 

இச்சம்பவம் தொடர்பில் களுத்துறை வடக்கு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





களுத்துறை சிறையில் தற்கொலைக்கு முயன்ற கைதி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு Reviewed by Vijithan on November 02, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.