அண்மைய செய்திகள்

recent
-

இன்று வடக்கு ,கிழக்கில் உணர்வெழுச்சியுடன் நினைவேந்தல்; தயார் நிலையில் துயிலுமில்லங்கள்

  நவம்பர் 27 ஆம் திகதியான இறு வடக்கு, கிழக்கில் மட்டுமல்லாது புலம்பெயர் தேசங்க்களிலும் மண்ணுக்காக தங்கள் உயிரை ஈந்த மாவீரர் மாவீரர் நாள் நினைவேந்தல் இன்று (27) வெள்ளிக்கிழமை உணர்வெழுச்சியுடன் அனுஷ்டிக்கப்படவுள்ளது.


நவம்பர் 27ஆம் திகதி மாவீரர்களுக்கான நினைவுகூறும் பொதுநாளக 1989 ஆம் ஆண்டு முதல் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. வழக்கமாக நவம்பர் மாதம் 25ஆம் திகதி முதல் மாவீரர்களை நினைவுகூரும் வாரம் எழுச்சியுடன் ஆரம்பிக்கப்பட்டு 27ஆம் திகதி நிறைவடையும்.




அந்தவகையில் வடக்கு,கிழக்கில் இம்முறை நினைவேந்தலுக்கான ஏற்பாடுகள் நிறைவு செய்யப்பட்டுள்ள நிலையில் இன்றையதினம் மாலை 6.05மணிக்கு நினைவொலி எழுப்பபட்டு, 6.06மணிக்கு அகவணக்கம் செலுத்தப்படும்.


தொடர்ந்து 6.07இற்கு ஈகை சுடர் ஏற்றப்படுவதோடு துயிலுமில்லப்படல் இடம்பெறவுள்ளது. யாழ்ப்பாணத்தில் கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம், கொடிகாமம் மாவீரர் துயிலுமில்லம், எள்ளங்குளம் மாவீரர் துயிலுமில்லம், உடுத்துறை மாவீரர் துயிலுமில்லம், சாட்டி மாவீரர் துயிலுமில்லத்திலும் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. அத்துடன் நல்லூரில் அமைக்கப்பட்டுள்ள நினைவாலயத்திலும் விசேட அஞ்சலிகள் இடம்பெறவுள்ளன.



கிளிநொச்சி மாவட்டத்தில் கனகபுரம் மாவீரர் துயிலுமில்லம், முழங்காவில் மாவீரர் துயிலுமில்லம், தேராவில் மாவீரர் துயிலுமில்லம் ஆகியவற்றில் நினைவேந்தல்கள் மிகவும் உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்படவுள்ளன.


இதேவேளை, முல்லைத்தீவு மாவட்டத்தில் முல்லைத்தீவு கடற்கரை, இரட்டைவாய்க்கால், தேவிபுரம், களிக்காடு, கொக்குத்தொடுவாய், சுதந்திரபுரம், அளம்பில், வன்னிவிளான்குளம், முள்ளியவளை, ஆலங்குளம், இரணைப்பாலை, முள்ளிவாய்க்கால் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மாவீரர் துயிலுமில்லங்களிலும் நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.



மன்னார் மாவட்டத்தின் ஆட்காட்டி வெளி, பெரிய பண்டிவிரிச்சன், முள்ளிக்குளம் துயிலுமில்லங்களிலும், வவுனியா மாவட்டத்தில் ஈச்சங்குளம் துயிலுமில்லத்திலும் நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்படவுள்ளன


கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மாவடிமுன்மாரி, தரவை, தாண்டியடி, வாகரை கண்டலடி ஆகிய மாவீரர் துயிலுமில்லங்களிலும், திருகோணமலை மாவட்டத்தின் சம்பூர் ஆலங்குளம் துயிலுமில்லத்திலும், அம்பாறை கஞ்சிக்குடிச்சாறு துயிலுமில்லத்திலும் மாவீரர் நாள் நினைவேந்தல் இடம்பெறவுள்ளது.




யாழ்ப்பாணம் கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் இராணுவக் கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையில், துயிலுமில்லத்திற்கு முன்பாக உள்ள காணி ஒன்றில் அஞ்சலி நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில், அங்கு உணர்வெழுச்சியுடன் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்படவுள்ளது.


வடமராட்சி எள்ளங்குளம் மாவீரர் துயிலுமில்லம் இராணுவக் கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையில், துயிலுமில்லத்திற்கு அருகில் உள்ள காணி ஒன்றில் அஞ்சலி நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


வவுனியா ஈச்சங்குளம் மாவீரர் துயிலுமில்லத்தில் 561 ஆவது இராணுவத் தலைமையகம் அமைந்திருப்பதால், அதற்கு அருகாமையிலுள்ள மைதானத்தில் நினைவேந்தல்கள் இடம்பெறவுள்ளன.


இதனைவிடவும், அரசியல் கட்சிகளின் அலுவலகங்கள், மற்றும் பொது இடங்கள், மத தலங்களிலும் நினைவேந்தல் நிகழ்வுகள் இம்பெறவுள்ளன.அரசியல் செய்திகள் அதேநேரம், புலம்பெயர் தேசங்கள் அனைத்திலும் இம்முறை மாவீரர்கள் நாளை உணர்வெழுச்சியுடன் முன்னெடுப்பதற்கு ஏற்பாடுகள் பூர்த்தியடைந்துள்ளதாக அறிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





இன்று வடக்கு ,கிழக்கில் உணர்வெழுச்சியுடன் நினைவேந்தல்; தயார் நிலையில் துயிலுமில்லங்கள் Reviewed by Vijithan on November 27, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.