அண்மைய செய்திகள்

recent
-

வடமாகாண ரீதியாக மன்னார் மாவட்டம் பதிவு செய்த வெற்றி

 வடமாகாண கிராம அபிவிருத்தித் திணைக்களத்தினால்  கிராம மற்றும் மாதர் கிராம அபிவிருத்திச் சங்கங்களின் செயல்பாடுகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட தரப்படுத்தல் மற்றும் சான்றிதழ் வழங்கும் விழா (11.04.2026) இன்று யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

​மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திரு. கே. கனகேஸ்வரன் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட இந்நிகழ்வில், மன்னார் மாவட்டம் பெரும்பாலான முக்கிய விருதுகளைக் கைப்பற்றிப் பெரும் சாதனையைப் படைத்துள்ளது.

​மாகாண மட்டத்தில் முதலிடம்:

தரப்படுத்தல் மதிப்பீட்டில் 80 புள்ளிகளைப் பெற்று மாகாண மட்டத்தில் முதலிடத்தைப் பிடித்த மூன்று மாதர் கிராம அபிவிருத்திச் சங்கங்களில், மன்னார் நகர பிரதேச செயலகப் பிரிவைச் சேர்ந்த கீரி மாதர் கிராம அபிவிருத்திச் சங்கம் மற்றும் உப்புகுளம் வடக்கு மாதர் கிராம அபிவிருத்திச் சங்கம் ஆகிய இரண்டும் அடங்குகின்றன.

​அதேபோல், மாகாண மட்டத்திலான கிராம அபிவிருத்திச் சங்கங்களுக்கான முதலிடத்தை மன்னார் நகர பிரதேச செயலகப் பிரிவின் பள்ளமுனை மேற்கு கிராம அபிவிருத்திச் சங்கம் தட்டிச்சென்றதோடு, மூன்றாம் இடத்தை உயிர்தராசன்குளம் கிராம அபிவிருத்திச் சங்கம் பெற்றுக்கொண்டது.

​மாவட்ட மட்ட விருதுகளைக் அள்ளிய மன்னார் நகர பிரதேச செயலகம்:

மாவட்ட ரீதியிலான மதிப்பீட்டிலும் மன்னார் நகர பிரதேச செயலகப் பிரிவின் சங்கங்களே அனைத்து முதன்மை இடங்களையும் தன்வசப்படுத்தின:

​கிராம அபிவிருத்திச் சங்கங்கள்:

​பள்ளமுனை மேற்கு (முதலிடம்)

​உயிர்த்தரசன்குளம் (இரண்டாம் இடம்)

​சின்னக்கடை (மூன்றாம் இடம்)

​மாதர் கிராம அபிவிருத்திச் சங்கங்கள்:

​உப்புகுளம் வடக்கு & கீரி மாதர் கிராம அபிவிருத்திச் சங்கங்கள் (இணைந்த முதலிடம்)

​ஜீவபுரம் மாதர் கிராம அபிவிருத்திச் சங்கம் (மூன்றாம் இடம்)

​சிறந்த அலுவலர்களுக்கான கௌரவம்:

சங்கங்களுடன் இணைந்து சிறந்த ஒத்துழைப்பை வழங்கியதற்காக பட்டித்தோட்டம் (MN-71) மற்றும் உப்புகுளம் வடக்கு (MN-82) ஆகிய கிராம நிலதாரிகளுக்குச் சிறந்த கிராம நிலதாரி விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

​மேலும், மாகாண மட்டத்திலான சிறந்த கிராம அபிவிருத்தி அலுவலருக்கான முதலிடத்தை மன்னார் நகர பிரதேச செயலக கிராம அபிவிருத்தி அலுவலரும், சிறந்த மாவட்ட கிராம அபிவிருத்தி அலுவலருக்கான விருதை மன்னார் மாவட்ட கிராம அபிவிருத்தி அலுவலரும் பெற்றனர். சங்கங்களைச் சிறந்த முறையில் வழிநடத்தியமைக்காக மாகாண மட்டத்திலான பிரதேச செயலாளர் விருதுகளில் மன்னார் நகர பிரதேச செயலாளர் முதலிடத்தைப் பெற்றுக்கொண்டார்.

​மக்கள் மயப்படுத்தப்பட்ட சேவைக்குக் கிடைத்த வெற்றி:

இவ் மதிப்பீட்டில் மன்னார் மாவட்டம் பெற்றுக்கொண்ட இந்த மகத்தான வெற்றி, மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற மக்கள் மயப்படுத்தப்பட்ட அரசாங்கத்திற்கும், மக்களின் தேவைகளை மையமாகக் கொண்டு இயங்கும் அலுவலக நடைமுறைகளுக்கும் கிடைத்த ஒரு தலைசிறந்த வெற்றியாகப் பார்க்கப்படுகிறது





















வடமாகாண ரீதியாக மன்னார் மாவட்டம் பதிவு செய்த வெற்றி Reviewed by Vijithan on November 05, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.