அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் நான்காம்கட்ட எண்ணெய் அகழ்வுகள் பெப்ரவரியில் ஆரம்பம்

மன்னார் வளைகுடாவில் நான்காவது கனிய எண்ணெய் அகழ்வுகளை எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதலே ஆரம்பிக்கவுள்ளதாக கெய்ன் லங்கா நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த வருட மத்தியிலேயே கனிய எண்ணெய் அகழ்வு பணிகளை ஆரம்பிப்பதாக கெய்ன் நிறுவனம் அறிவித்திருந்தது. எனினும் குறிப்பிடப்பட்ட நாட்களுக்கு முன்னரேயே அகழ்வு வேலைகளை ஆரம்பிக்கவுள்ளது.

கெய்ன் இந்திய நிறுவனம் இந்த நிதியாண்டின் மூன்றாவது காலாண்டுக்கான அறிக்கையை சமர்ப்பித்து இந்த தகவலை வெளியிட்டுள்ளது. தோண்டுவதற்குப் பயன்படுத்தப்படும் இயந்திரத்தை குறித்த காலத்துக்கு முன்னர் பெற முடிந்தது.
அமைப்புப் பணிகள் சிறந்த நிலையில் இருந்ததால் குறித்த காலத்துக்கு முன்னரேயே கிணறுகளைத் தோண்ட இயலுமானதாக கெய்ன் இந்திய நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த காலாண்டில் 791 மில்லியன் அமெரிக்க டொலர்களை கெய்ன் நிறுவனம் வருமானமாகப் பெற்றுள்ளது. இது கடந்த ஆண்டைவிட 38 வீத அதிகரிப்பாகும்.
இந்த காலாண்டுக்காக வரி செலுத்தப்பட்ட பின்னர் நிறுவனத்தின் இலாபம் 540 மில்லியன் அமெரிக்க டொலர்களாக உள்ளது. ஏற்கனவே, மன்னாரில் இந்த நிறுவனம் மூன்று கிணறுகளைத் தோண்டியுள்ளது.
இதில் இரண்டில் இயற்கை எரிவாயு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கெய்ன் இந்திய நிறுவனம் பிரதம நிறைவேற்று அதிகாரி இளங்கோ இதுபற்றி கூறுகையில்,
இதுவரை தங்களுடைய நிறுவனம் இந்தியாவிலும் இலங்கையிலும், தென் ஆபிரிக்காவிலும் அகழ்வுகளை மேற்கொண்டதன் மூலம் கனிய எண்ணெய், இயற்கை எரிவாயு அகழ்வு நடவடிக்கைகளை வெற்றி கரமாக மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தார்.
மன்னாரில் நான்காம்கட்ட எண்ணெய் அகழ்வுகள் பெப்ரவரியில் ஆரம்பம் Reviewed by NEWMANNAR on January 23, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.