அண்மைய செய்திகள்

recent
-

வெள்ளப்பெருக்கின் போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட இருந்த பொருட்களே பழுதடைந்த நிலையில் மீட்பு-அதிகாரிகளின் அசமந்த போக்கு



மன்னார் பல நோக்கு கூட்டுறவுச்சங்கத்தின் களஞ்சிய சாலைக்குள் பதுக்கி வைக்கப்பட்ட பல இலட்சம் ரூபாய் பெறுமதியான உலர் உணவுப்பொருட்கள் அனைத்துமே இறுதி நேரத்தில் வெள்ள பாதிப்புக்கள் ஏற்படும் பட்சத்தில் மன்னார் தீவுக்குள் இடம் பெயர்ந்து வரும் மக்களுக்கு வழங்குவதற்காக
மன்னார் மாவட்டச் செயலகத்தினால் கொள்வனவு செய்யப்பட்டு மன்னார் மாவட்ட அனார்த்த முகாமைத்துவப்பனிப்பாளிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் அங்கு களஞ்சியப்படுத்தப்பட்ட பொருட்களே இவ்வாறு பழுதடைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக   தெரிய வந்துள்ளது.


கடந்த டிசம்பர் மாதம் மன்னாரில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க கொள்வனவு செய்யப்பட்ட பல இலட்சம் ரூபாய் பெருமதியான உலர் உணவுப்பொருட்களை கடந்த டிசம்பர் மாதம் 28 ஆம்  29 ஆம் திகதிகளில் மாவட்ட அனார்த்த முகாமைத்துவ பணிப்பாளர் மற்றும் பணியாளர்கள் மன்னார் பலநோக்கு கூட்டுறவுச்சங்கத்தின் களஞ்சிய சாலையில் களஞ்சியப்படுத்தியுள்ளனர்.

-மன்னார் மாவட்டச் செயலகத்தின் வேண்டு கோளுக்கு  அமைவாகவே மன்னார் பலநோக்கு கூட்டுறவுச்சங்கம் தமது களஞ்சிய சாலையில் பொருட்களை கலஞ்சியப்படுத்துவதற்கான  அனுமதியை வழங்கி இருந்தது.
இதன் போது அரிசி,மா,சீனி,பருப்பு,உருளைக்கிழங்கு,பெரிய வெங்காயம்,மீன் டின் போன்றவை களஞ்சியப்படுத்தப்பட்டது.

-இந்த நிலையில் ஜனவரி மாதம் முதல் வாரமளவில் தம்மிடம் உலர் உணவுப்பொருட்கள் எவையும் கையிருப்பில் இல்லை என இதற்கு பொறுப்பான அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் குறித்த களஞ்சிய சாலையில் பொருட்கள் களஞ்சியப்படுத்தி சுமார் 20 நாட்கள் வரை மாவட்ட அனார்த்த முகாமைத்துவ பணிப்பாளர் அங்கு வந்து பொருட்களின் நிலமையை பார்வையிடவில்லை.

இந்த நிலையில் பெரிய வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு ஆகியவை படிப்படியாக பழுதடைந்து சுமார் 160 மூடைகளுக்கு மேற்பட்ட வெங்காயம் மற்றும் உறுளைக்கிழங்குகள் முழுமையாக பழுதடைந்து பாரிய துர்நாற்றம் வீச ஆரம்பித்தது.

இந்த நிலையிலேயே இவற்றை அப்புறப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்ட போது குறித்த பொருட்கள் பதுக்கி வைத்த விடையம் அம்பலமகியது.

குறித்த பொருட்களை வெளியில் கொண்டு சென்று விற்பனை செய்வதற்காக அல்லது தனிப்பட்ட முறையில் பகிர்ந்தளிப்பதற்காகவே நீண்ட நாட்களாக பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

-எனவே பாதிக்கப்பட்ட மக்களுக்கு குறித்த பொருட்களை உரிய நேரத்திற்கு வழங்காது அவற்றை பதுக்கி வைத்து பழுதடைந்த நிலையில் வெளியில் கொட்டும் இந்த நடவடிக்கைக்கு துனை போன அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என மன்னார் மக்களும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களும் வேண்டு கோள் விடுத்துள்ளனர்.

இவ்விடையம் தொடர்பில் சில பிரமுகர்களினால் அனார்த்த முகாமைத்துவ அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செலலப்பட்டள்ளது.











வெள்ளப்பெருக்கின் போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட இருந்த பொருட்களே பழுதடைந்த நிலையில் மீட்பு-அதிகாரிகளின் அசமந்த போக்கு Reviewed by NEWMANNAR on January 23, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.